வெள்ளி, 23 ஜனவரி, 2026

மூதுரை - ஔவையார்



ஔவையார் இயற்றிய நீதி நூல் மூதுரை. பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு. இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 31 வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்துகிறது.

விழுமியம் : நல்லார் குணம்

1.                                        நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க

                    நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

                    குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

                    இணங்கி இருப்பதுவும் நன்று. (8)

நல்ல பண்பு உடையவர்களைக் காண்பது நன்மை தரும்.

நல்லவர்களின் அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.

நல்லவர்களின் நற்பண்புகளை அடுத்தவரிடம் கூறுவது நன்மை தரும்.

நல்லவர்களுடன் எப்போதும் நட்புக்கொண்டு வாழ்வது நன்மை தரும்.

2.                       நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை (10)

உழவர்கள் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும்.

அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை எல்லாருக்கும் பயனைத் தரும்.

3.                           பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்

விண்டு உமி போனால் முளையாதாம் கொண்ட பேர்

ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவின்றி

ஏற்றம் கருமம் செயல் (11)

 

முதலில் முளைப்பது அரிசிதான் என்றாலும், உமி நீங்கினால் அது முளைக்காது;

அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி பெரிய காரியங்களைச் செய்து முடிக்க முடியாது.

4.                           கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே

நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய

மாட்டாதவன் நன் மரம் (13)

கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல.

சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்.

5.                          அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத் தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு. (16)

நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்கள் தனக்குரிய காலம் வரும்வரை மைதியாகக் காத்திருப்பார்கள். அதைக்கண்டு அவர்களை எளிமையாக வென்று விடலாம் என்று பிறர் நினைக்கக்கூடாது.

6.                           சீரியர் கெட்டாலும் சீரியரே, சீரியர் மற்(று)

அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? – சீரிய

பொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்

மண்ணின் குடம் உடைந்தக் கால். (18)

தங்கத்தால் செய்த பானை உடைந்து சிதறினாலும் தங்கமாகவே இருந்து மீண்டும் உதவும். அதுபோலச் சிறந்த பண்பாளர் வறுமை அடைந்தாலும் தனது நல்ல குணத்தில் இருந்து தவறாமல் பிறருக்கு உதவுவார்.

ஆனால், மண்ணால் செய்த குடம் உடைந்தால் அதற்கு எந்த மதிப்பும் இருக்காது

அதுபோலத் தீயவரால்  பிறருக்கு  எந்த  பயனும் இருக்காது.

7.                          உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா

உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன் பிறவா

மாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்

அம்மருந்து போல்வாரும் உண்டு. (20)

நோய் நம்முடனே பிறப்பதால் உறவு என்று நினைக்கக் கூடாது. அது நம்மைக் கொன்றுவிடும். எனவே உடன் பிறந்தோர் அனைவரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது. எங்கோ பெரிய மலையில் இருக்க

            நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே

சீர் ஒழுகு சான்ற

சிறு கோபம் வந்தாலே தீயோர் பிளந்து போட்ட கல்லைப் போலப் பிரிந்து விடுவர். பெரும் கோபத்தால் பிரிந்தாலும் நல்ல பண்புடையவர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். நல்ல பண்புடையவரின் கோபம், நீரில் எய்த அம்பால் உண்டான பிளவைப் போன்றது.

9.                      நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்

கற்றாரைக் கற்றாறே காமுறுவர் – கற்பிலா

மூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்

காக்கை உகக்கும் பிணம். (24)

குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சென்று சேரும். அதுபோல, கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்ந்து உண்பதைப் போல, கல்வி அறிவில்லாத மூடர்களுடன் மூடர்களே சேர்வர்.

             மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனில் கற்றோன் சிறப்புடையன் – மன்னர்க்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்

சென்றஇடம் எல்லாம் சிறப்பு. (26)

மன்னனையும் குற்றம் இல்லாமல் கற்ற அறிவுடையவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவரே சிற்றப்புடையவர். மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவருக்கு அவர் செல்லும் இடமெல்லாம் சிறப்பு.


திங்கள், 19 ஜனவரி, 2026

நறுந்தொகை (வெற்றி வேற்கை) - அதிவீரராம பாண்டியர்


நறுந்தொகை (வெற்றி வேற்கை)

அதிவீரராம பாண்டியர் 


தமிழில் பிற்காலத்தில் எழுந்த நீதிநூல்களுள் ஒன்று நறுந்தொகை. இந்நூலுக்கு வெற்றிவேற்கை என்ற வேறு ஒரு பெயரும் உண்டு.  இந்நூல் அதிவீரராம பாண்டிய மன்னரால் இயற்றப்பட்டது. இளைஞர்கள் நல்ல அறநெறிகளை அறிய வேண்டி இயற்றப்பட்டுள்ளது.

கொற்கை ஆளி குலசேகரன் புகல் நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னாற் குற்றங் களைவோர் குறைவிலா தவரேஎனும் அடிகள் அதிவீரராமர் என்பவர் கொற்கை என்னும் நகரை ஆண்ட ஒரு பாண்டிய மன்னர் என்று அறிகிறோம். இவர் தமிழில் மேலும் பல நூல்களை இயற்றியுள்ளார், அவை நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம், வாயு சங்கிதை, திருக்கருவை அந்தாதிகள் ஆகியவையாகும், இந்நூல்கள் பெரும்பானமை வடமொழி நூல்களின் வழியில் பாடப்பெற்றவையாக இருப்பதினால் இவர் வடமொழியிலும் தேர்ச்சி பேற்றிருந்தார் எனக் கொள்ளலாம். இவரின் காலம் கி.பி. 11 அல்லது 12-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சிலரும் 15-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று சிலரும் கூறுவர்.

 

ஆசாரக்கோவை - பெருவாயின் முள்ளியார்

 


ஆசாரக்கோவை

பெருவாயின் முள்ளியார்

 

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் நூல். ஆசாரம் என்பதற்கு ஒழுக்கம் என்றும், கோவை என்பதற்கு அடுக்கிக் கூறுதல் என்றும் பொருள். கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் இந்நூலை வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இயற்றியுள்ளார். வண்கயத்தூர் என்பது இவரது ஊர்ப் பெயர். முள்ளியார் என்பது இவரது இயற்பெயர். ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடியேத்தி என்ற சிறப்புப் பாயிர அடியானது சிவபெருமான் மூன்று மதில்களை அழித்த செய்தியைக் கூறுவதால் இவர் சைவ சமயத்தவர் எனலாம்.

 ஆச்சாரத்தின் வித்துகளாக நன்றி அறிதல், பொறையுடைமை, இன்சொல் பேசுதல், எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமை, கல்வியோடு வாழ்தல், அறிவுடைமை, ஒப்புரவு ஆற்ற அறிதல், நல்இனத்தாரோடு நட்டல் ஆகிய எட்டு பண்புகளை எடுத்துரைக்கின்றன. இந்நூல் பாயிரம் நீங்கலாக 100 வெண்பாக்களைக் கொண்டது. குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடை வெண்பா என வெண்பாவின் வகைகள் யாவும் இந்நூலில் காணப்படுகின்றன. இந்த நூலுக்கு மூல நூல் ஆரிடம் என்ற வடமொழி நூலாகும்.

விழுமியம் : நல்லொழுக்கம்

நான்மணிக்கடிகை - விளம்பி நாகனார்

 


நான்மணிக்கடிகை

விளம்பி நாகனார்

 

நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இஃது ஒரு நீதி நூல். விளம்பி நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்ட இந்நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால் ஆனது இந்நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும், நான்கு மணியான கருத்துகள் சொல்லப்படுகின்றன. இதனாலேயே இது நான்குவகை மணிகளால் ஆன ஆபரணம் நான்மணிக்கடிகை என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் நூற்று நான்கு பாடல்கள் உள்ளன. இவற்றில் இரண்டு பாடல்களை (7,100) ஜி.யூ.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். இந்நூல் நான்காம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும்.

விழுமியம் - தனிமனித அறம்

இன்னாநாற்பது - கபிலர்

 


இன்னாநாற்பது

கபிலர்


பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அறம் பற்றிப் பேசக்கூடிய நூல் இன்னா நாற்பது. இந்நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. இந்நூலில் கடவுள் வாழ்த்து ஒன்றைச் சேர்த்து 41 பாடல்கள் உள்ளன. கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் கபிலர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு. சங்கம் மருவிய காலத்தைச் சார்ந்த இந்த நூல் உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றி நீதி கூறியுள்ளது. இது கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இன்னிசை வெண்பாக்களால் ஆனது. இதில் 164 கூடாச் செயல்கள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கருத்திற்குப் பின்னும் ‘இன்னா’ என எடுத்துக் கூறுவதாலும் நாற்பது பாடல்களைக் கொண்டிருப்பதாலும் ‘இன்னா நாற்பது’ என்ற பெயரை இந்நூல் பெற்றுள்ளது.

இன்னாநாற்பது என்னும் நீதிநூலை இயற்றிய புலவர் கபிலர் கி.பி. 4 நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சங்ககால கபிலர் அல்ல.

 

விழுமியம் - கூடா நீதி

பழமொழி நானூறு முன்றுறை அரையனார் பாடல் எண் - 32, 244, 360, 361, 372

 


பழமொழி நானூறு

முன்றுறை அரையனார்


பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. 4ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. வரலாற்றுக் குறிப்புகளும் புராணக் குறிப்புகளும் இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

 

விழுமியம் - வாழ்வியல் அறம்

நாலடியார் (பொருட்பால் - நல்லினம் சேர்தல்)



நாலடியார்

(பொருட்பால் - நல்லினம் சேர்தல்)

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்த்தாக வைத்துச் சிறப்பிக்கப்படும் நூல் நாலடியார். இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. நான்கடி வெண்பாக்களால் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் சிறப்புற உரைப்பது நாலடியார். இந்நூலிற்கு நாலடி நானூறு என்றும் 'வேளாண் வேதம்' என்றும் வேறு பெயர்கள் உண்டு. ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கிறது. இத்தகு நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை

கடவுள் வாழ்த்து : 1

அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்)

பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்)

காமத்துப்பால் : 30 பாடல்கள் (3 அதிகாரம்)

மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)

 

 விழுமியம் - நல்லோர் நட்பு