சனி, 5 டிசம்பர், 2020

புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

 புதினத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

 

முனைவர் ந.இராஜேந்திரன்,

தமிழ்  உதவிப்பேராசிரியர்,

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.),

கோயம்புத்தூர் - 641 028.

 

முன்னுரை

உரைநடையில் எழுதப்பட்ட நெடுங்கதையை ஆங்கிலேயர் நாவல் என்பர். நாவெல்லஸ் என்ற இலத்தின் சொல்லின் சிதைந்த வடிவமே நாவல் என்பதாகும்.  தமிழரும் முதலில் இதை நாவல் என்றே அழைத்தனர். பிறகு வடமொழிப்பெயரால் நவீனம் என்றும் அழைத்தனர். பிறகு புதினம் என்று தமிழ்ப்படுத்திக்கொண்டனர். தமிழ் இலக்கிய மரபில் புதினத்துக்கு என தனித்துவமான இடம் உண்டு அதை விரும்பிப் படித்த, படிக்கும் வாசகர்கள் உண்டு. தமிழ்ப்புதினத்தில் ஏற்பட்ட வளர்ச்சிகளை இக்கட்டுரையின் வழிக் காண்போம்.

நாவலின் கட்டமைப்பு

நாவலின் தாயகம் இத்தாலி ஆகும். கதை சூழ்ச்சி, பாத்திரங்கள், உரையாடல் என சிறந்த கட்டமைப்புடன் பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி சிறந்த அறக்கருத்தையும் உணர்த்துவதே சிறந்த புதினத்தின் கட்டமைப்பாகும். 

சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு

சிறுகதையே நாவலின் முதல் வளர்ச்சி நிலை என்றும் அதிலிருந்தே நாவல் வளர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்றும் ஹட்சன் உரைக்கிறார். சிறுகதை ஒரு சிறிய வட்டத்துக்குள் சுழல்வது. ஆனால் நாவல் மிகப்பெரிய பரப்பளவைக் கொண்டு இயங்குவதாகும். புதினத்தில் நிறைய கதாபாத்திரங்கள், கற்பனைகள், வருணனைகள் வரலாம்.

முதற் காலக் கட்டம் (1910க்கு முன்)

மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ் நாவல் படைப்பாளிகள் ஆவர். 

இரண்டாம் காலக் கட்டம் (1910-1940)

இக்காலக் கட்டத்தில் வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு, எஸ்.ஜி.ராமானுஜலு நாயுடு, வை.மு.கோதைநாயகி அம்மாள் முதலியோர் நாவல்கள் படைத்தனர்.

மூன்றாம் காலக் கட்டம் (1940 முதல் இன்று வரை)

இக்காலக் கட்டம் கல்கியிலிருந்து தொடங்குகிறது. அகிலன், க.நா. சுப்பிரமணியம், தி.ஜானகிராமன், டாக்டர். மு.வ., அறிஞர்அண்ணா, நா.பார்த்தசாரதி, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன், கு.ராஜவேலு, லக்ஷ்மி, கலைஞர் கருணாநிதி, விக்கிரமன், இந்திரா பார்த்தசாரதி, நீல.பத்மநாபன், பாலகுமாரன், குமுதினி, அநுத்தமா, ராஜம் கிருஷ்ணன், வாஸந்தி, விமலாரமணி, சிவசங்கரி, இந்துமதி, கிருத்திகா, பாமா, அநுராதா ரமணன், சாண்டில்யன், கோவை. மணிசேகரன் முதலியோர் இக்காலக் கட்ட நாவலாசிரியர்கள் சிலர் ஆவர். 

முதல் மூன்று நாவல்கள்

1.                      வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம்

2.                     இராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம்

3.                      மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம்

 

நாவல்களின் வகைப்பாடு

நாவல்களை, துப்பறியும் நாவல்,  சமூக நாவல், வரலாற்று நாவல், மொழிபெயர்ப்பு நாவல், தழுவல் நாவல்,  வட்டார நாவல் எனப்பல வகைப்படுத்தலாம்.

துப்பறியும் நாவல்

ஆவலைத் தூண்டுவதாகவும், எதிர்பார்ப்பை ஏற்படுத்ததுவதாகவும் இந்நாவல்கள் அமையும். ஆரணி குப்புசாமி முதலியார்,வடுவூர் துரைசாமி ஐயங்கார்,  தமிழ்வானன், பிடி.சாமி, சுஜாதா, பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா ஆகியோர் துப்பறியும் நாவல் எழுதிப் புகழ்பெற்றவர்களாவர். இவர்களுள் இராஜேஸ்குமார் அவர்களின் துப்பறியும் நாவல்களைத் தற்போது தொலைக்காட்சிகளில் குறும்படங்களாக எடுத்து ஒளிபரப்பி வருகிறார்கள். 

சமூக நாவல்

காலந்தோறும் மக்கள் எதிர்கொண்ட சிக்கல்களை எதிரொலிப்பன சமூகப் புதினங்களாகும்.  கொத்தமங்கலம் சுப்பு, ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, மு.வரதராசன்,  அகிலன் போன்றோர் சமூகப் புதினங்களால் மக்கள் மனதைக் கவர்ந்தவர்களாவர். கல்கியின் அலையோசை, தியாகபூமி, மகுடபதி ஆகிய நாவல்களும்,  மு.வரதராசன் அவர்களின் கயமை, அகல்விளக்கு, நெஞ்சில் ஒரு முள், கரித்துண்டு ஆகிய நாவல்களும் சமூக நாவல்களுக்குத் தக்க சான்றுகளாகும். 

வரலாற்று நாவல்

நேற்றைய செய்தியே இன்றைய வரலாறு என்பர். தமிழக வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்வரலாற்று நாவல்கள் தோன்றின. கல்கி, சாண்டில்யன், விக்கிரமன், ஜெகசிற்பியன், மு.மேத்தா ஆகியோர் வரலாற்று நாவல்களால் புகழ்பெற்றோராவர்.  வரலாற்றுப் புதினத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் கல்கி ஆவார். கல்கி எழுதிப் புகழ்பெற்ற வரலாற்றுப் புதினங்களுள் பார்த்திபன் கனவு, சிவகாமியின்  சபதம், பொன்னியின் செல்வன் ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும். 

மொழிபெயர்ப்பு நாவல்

சிறந்த பிறமொழி நாவல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதை மொழிபெயர்ப்பு நாவல் என அழைத்தனர். காண்டேகரின் மராட்டிய நாவலை கா.ஸ்ரீஸ்ரீ அவர்கள் மொழிபெயர்த்தார், ஒரிய மொழிக் கதைகளைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக தமிழ்நாடன் சாகித்திய அகாதமி விருதுபெற்றுள்ளார். 

தழுவல் நாவல்

இவ்வகைப் நாவல்கள் தமிழில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. டால்ஸ்டாயின் அன்னாகரினாவைத் தழுவி நாராயண துரைக்கண்ணன் சீமாட்டி கார்த்திகாயினி என்ற நாவலை எழுதினார். ரெயினால்சின் நாவலைத் தழுவி மறைமலையடிகள் குமுதவல்லி என்ற நாவலை எழுதினார்.

வட்டார நாவல்

அந்தந்த வட்டாரப் பேச்சுவழக்குகளையும், பழக்கவழக்கங்களையும் கொண்டு எழுதப்படுவன வட்டார நாவல்களாகும். சூரிய காந்தனின் மானாவாரி மனிதர்கள், தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலி ஆகிய நாவல்கள் தக்க சான்றுகளாகும்.

குறுநாவல்

மிக அதிகமான பாத்திரங்களோடு நிறையப் பக்கங்களோடு இல்லாமல் குறைவான பாத்திரங்களைக் கொண்டு, சிறுகதையை விடச் சற்றுப் பெரிதாக அமைந்து விளங்கும் நாவல் குறுநாவலாகும். எம்.வி.வெங்கட்ராமின் ‘உயிரின் யாத்திரை’, ‘இருட்டு’,  ச.கலியாணராமனின் ‘பஞ்சம் பிழைக்கபோன்றவை இதற்குச் சான்றாக அமையும்.

பெரு நாவல்கள்

அளவில்  பெரியதாக, மிக அதிகமான பாத்திரங்களுடன் நிகழ்வுகள் அதிகமாக உள்ள நாவல் பெரு நாவலாகும். பெரு நாவல்கள் பல பாகங்களாகக் கூட வெளிவரலாம். தொடக்கக் காலத்தில் பெரிய நாவல்களைக் கல்கி தமிழில் எழுதினார். கல்கியினி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவை சில பாகங்களாக வெளிவந்த பெருநாவல்களாகும்.

பெண் நாவலாசிரியர்கள்

பெண் நாவலாசிரியர்களுள் இராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இரமணி சந்திரன், இந்துமதி ஆகியோர் சிறந்த பெண் எழுத்தாளர்களாவர். 

முடிவுரை  

இன்றைய சூழலில் நிறையவே பொழுதுபோக்குக் கருவிகள் வந்துவிட்டன. ஆனால் கடந்த காலத்தில் நாவல் வாசித்தல் என்பது மிகப்பெரிய பொழுதுபோக்காக இருந்தது. அந்த வழக்கம் இந்தக் காலத்திலும் தொடர்ந்து வருவது நாவலின் ஆதிக்கத்தை எடுத்தியம்பும். 











திங்கள், 21 செப்டம்பர், 2020

பெருங்கற்காலத்தைச் சார்ந்த இடங்கள் - தயிர்ப்பாளையம், பேரோடு Megalithic Places - Sithode, Thayirpalayam, Perodu Erode Distric


பெருங்கற்காலத்தைச் சார்ந்த இடங்கள் - தயிர்ப்பாளையம், பேரோடு Megalithic Places - Sithode, Thayirpalayam, Perodu Erode Distric
 கொடுமணலுக்கு இணையான இடம் தான் தயிர்ப்பாளையம், பேரோடு
இங்கு பல நிறஙடகளில் பாறைகள் கிடைத்துள்ளன. இது போன்ற பாறைகளில் இருந்துதான் பெருங்கற்காலத் தமிழ்ச் சமூக மக்கள் அவர்களுக்குத் தேவையான வேட்டைக் கருவிகலை உருவாக்கிருக்க வேண்டும்

மேலும்  இது போன்ற பாறைகளில் இருந்துதான் கல்மணி பாசிகளையும் உருவாக்கியிருக்க வேண்டும். கொடுமணல் இதற்குச் சான்று.

முனைவர் ந.இராஜேந்திரன்




புதன், 16 செப்டம்பர், 2020

திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின் தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம், K.P. Aravanan's History of the Tamil People for Performance - Nayakkar Period

 

திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின்  

தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம்

 

முனைவர் ந.இராஜேந்திரன்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)

கோயமுத்தூர் - 28

 

வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும் என்ற க.ராஜனின் (தொல்லியல் நோக்கில் சங்க காலம்,ப.1) கூற்றுக்கிணங்க க.ப.அறவாணன் அவர்கள், தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம் எனும் நூலினை மிகுந்த சிரத்தையோடு உண்மைச் சான்றுகளைத் திரட்டி வரலாற்றுப் பின்புலத்தோடும் சமூகவியல் பின்புலத்தோடும் டிசம்பர் 2013 ஆம் ஆண்டில் வெளிக்கொணர்ந்துள்ளார். இவ்விரு அணுகுமுறைகளை உள்வாங்கி எழுதப்பெற்ற இந்நூலினைக் கட்டமைப்பு அடிப்படையிலும் கருத்தியல் அடிப்படையிலும் பிரித்து ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

கட்டமைப்பு நோக்கு

2013 இல் தமிழ்க் கோட்ட வெளியீடாக வெளிவந்த இந்நூல் 302 பக்கங்களையும் 14 தலைப்புகளையும் 11 பின்னிணைப்புகளையும் உள்ளடக்கியதாக நூல் கட்டமைக்கப் பட்டுள்ளது.

இந்நூலினைச் செம்மையுற வெளிக்கொணர 509 வரலாற்றுத் தரவுகளைப் பல்வேறு இலக்கியங்களில் இருந்தும் கல்வெட்டு, செப்பேடு, வெளிநாட்டார் குறிப்புகளில் இருந்தும் தேடித் தொகுத்துள்ளார். தொகுத்த கருத்துக்களை 14 தலைப்புகளாக வகைப்படுத்தி தலைப்பின் கீழ் கால வரிசைப்படி உட்தலைப்புகளைக் கொடுத்துக் கருத்துக்களைத் தேவையான இடங்களில் விரித்தும் சுருக்கியும் பதிவுசெய்துள்ளார். அத்தலைப்புகளும் உட்பிரிவுகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு,

ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

எட்டிசேரி, நாகமுகுந்தன்குடியில் கண்டெடுக்கப்பட்ட தாங்கிகள் Itticherry, Nagamugunthangudi

சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு அருகே எட்டிசேரி, நாகமுகுந்தன்குடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத் தமிழ்ச்சமூக மக்கள் பயன்படுத்திய தாங்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கைமாறு (உப்புமூட்டை)

 

    கைமாறு

உப்புமூட்டை

முனைவர் ந.இராஜேந்திரன்

ப்பா இருந்தபோது அவருக்கு நான் செய்ய நினைத்தவற்றில் செய்யாமல் போனது அதிகம். அதன் வருத்தமும் அப்பாவோடு இருந்த பொழுதுகளும் அடிக்கடி என் மனக்கிடங்கில் மேலிட்டுக்கவிதையாக உருமாறின. உருமாறியக் கவிதைகளைத் தொகுத்து அப்பாவின் நினைவாக நூலாக்கம் செய்துகொண்டிருந்தேன். வகுப்பில் அப்பா பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவருக்காக எழுதிய ஒரு கவிதையைப் படித்துக்காண்பித்தேன். மறுநாள் காலை மாணவி ஒருவர் அவர் அப்பாவை நினைத்து ஒரு கவிதை எழுதி வந்து என்னிடம் கொடுத்தார். படித்துப் பார்த்தேன். என்னைப் போலவே அவருக்கும் அப்பா இல்லை என்பதை உருக்கமாகப் பிரதிபலித்தது அக்கவிதை. இதேபோல் எத்தனை  மாணக்கர்கள் தங்கள் அப்பாவைப் பிரிந்தும்  அப்பா இல்லாமலும் வேதனையோடு வாழ்கிறார்கள். அவர்களின் வலிகளையும்    உணர்வுகளையும் இந்நூலின்வழிப் பறைசாற்ற வேண்டுமென எண்ணியதின் விளைவே இத்தொகுப்பு.

இந்நூலில் என்னோடு கைகோர்த்துப் பயணித்திருக்கும்  ஏனைய கவிஞர்களுக்கும், நல்லதொரு அணிந்துரை வழங்கிய நண்பர் முதுமுனைவர் பகவதிசுந்தரம் சிவமாருதி அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

தமிழ்ச் சமூக வரலாற்றில் கொடுமணல் : நினைவிடம்

தமிழ்ச் சமூக வரலாற்றில் கொடுமணல் : நினைவிடம்

கொடுமணல் தமிழர் வரலாற்றை மீள்கட்டமைப்புச் செய்ய மிக முக்கியமான இடம். தமிகத்தில் 150 க்கும் மேல்  அகழாய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன. ஆனால்,  கொடுமணலில் நடத்தப்பெற்ற அகழாய்வில்தான் அதிகமான குறியீடகள்   கண்டெடுக்கப்பெற்றன. அதற்குப் பிறகுதான் ஆய்வாளர்களின் கவனம் குறியீடுகள் பக்கம் திரும்பியது என்றால் அது மிகையாகாது. 


திங்கள், 6 ஜூலை, 2020

ஆய்வுத் தரவகங்களும் மேற்கோள் பட்டியலும் (Research Databases and Citation...





கோயம்புத்தூர் - இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, மொழித்துறை சார்பாக 02.07.2020 அன்று நடைபெற்ற ஆய்வுத் தரவகங்களும் மேற்கோள் பட்டியலும் எனும் பொருண்மையிலான ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் கலந்துகொள்ள முயற்சித்து  உள்ளே வரமுடியாமல் போனவர்களைக் கருத்தில் கொண்டும் இந்தப் பதிவை வெளியிடுகிறேன்.

கீழ்க்காணும் இணைப்பைச் சுட்டி பயன்பெறுங்கள்

  நன்றி  

ஒருங்கிணைப்பு 
முனைவர் ந.இராஜேந்திரன்
தமிழ் உதவிப்பேராசிரியர்
தமிழ் நாற்றங்கால் பதிப்பகம், வலைக்காட்சி

நன்றி 
முதுமுனைவர் ப.சிவமாருதி
தாய்லாந்து

புதன், 1 ஜூலை, 2020

தலைப்பு : ஆய்வுத் தரவகங்களும் மேற்கோள் பட்டியலும்.


கோவை - இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, மொழித்துறை நடத்தும் இணையவழி ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் (FDP) 02.07.2020 அன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை நடக்கவிருக்கிறது அனைவரும் கலந்துகொள்ளுங்கள் தோழமைகளே.
சிறப்பு விருந்தினர் : முதுமுனைவர் ப.சிவமருதி அவர்கள்
தாய்லாந்து
தலைப்பு : ஆய்வுத் தரவகங்களும் மேற்கோள் பட்டியலும்.
செயலி : கூகுள் மீட்
கட்டணம் இல்லை
மின் சான்றிதழ் வழங்கப்படும்
தொடர்புக்கு : 9597536324.

கீழடிக்கு அருகே எட்டிசேரி, நாகமுகுந்தன்குடியில் கண்டெடுக்கப்பட்ட விலங்க...

வெள்ளி, 5 ஜூன், 2020

எட்டிசேரி, நாகமுகுந்தன்குடி வட்டுச்சில்லுகள்



முனைவர் ந.இராஜேந்திரன்
Dr N.Rajendran
தொல்லியல்
பெருங்கற்காலத் தமிழ்ச் சமூகத்தின் தொல்லெச்சங்கள்
சிவகங்கை மாவட்டம் கீழடிக்கு அருகில் எட்டிசேரி, நாகமுகுந்தன்குடி ஆகிய ஊர்களில் மேற்பரப்பு கள ஆய்வில் கண்டெடுத்த வட்டுச்சில்லுகள்.

புதன், 3 ஜூன், 2020

தொல்லியல் : எட்டிசேரி Archeology place : Ittichery




முனைவர் ந.இராஜேந்திரன்
Dr N.Rajendran
தொல்லியல்
எட்டிசேரி, நாகமுகுந்தன்குடி
பெருங்கற்காலத் தொல்லெச்சங்கள்

செவ்வாய், 2 ஜூன், 2020

சீவலமாறனின் மொழியாடலில் கற்றலின் முக்கியத்துவம்


சீவலமாறனின் மொழியாடலில் கற்றலின் முக்கியத்துவம்

Dr N.Rajendran
முனைவர் ந.இராஜேந்திரன்
மொழித்துறை
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)
கோயம்புத்தூர் - 28.


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வேரோடிக் கிடக்கும் அறியாமை எனும் இருளை அகற்றி, ஆறாம் அறிவோடு இயங்கி, வாழ்க்கை மேன்மையுற கல்வியறிவு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக  அமைகிறது என்பதைக் கற்கை நன்றே கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே (வெற்றி வேற்கை.35) என்னும் சீவலமாறனின் மொழியாடல்வழி விளக்கும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.

சீவலமாறன்
பிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவர். பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564-1604) வரை ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது.

இவர் ஒரு அரசர் என்பதோடு அன்றி, திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். வடமொழியிலும் தமிழிலும் தோன்றிய நளன் கதைகூறும் நூல்களைத் தழுவி நைடதம் என்னும் நூலை இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக்கூறும் வெற்றிவேற்கை, காசிகாண்டம், கூர்ம புராணம், மகாபுராணம், ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுடன் கொக்கோகம் எனப்படும் காமம் நூலையும் தமிழில் தந்துள்ளார். சீவலமாறன் எனும் பெயர் உண்டு என்பதைப் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சிதம்பரநாத கவி என்பவர் இவரைப்பற்றி இயற்றிய சீவலமாறன் கதை என்னும் நூலால் அறியமுடிகிறது (https://ta.m.wikipedia.org).

மனித இனத்தால் இழிதொழிலெனக் கருதப் பட்டுப் புறக்கணிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று பிச்சை எடுப்பது.  இப்படிப்பட்ட இழிதொழிலைச் செய்து பிழைத்துக்கொள் என்று எவரும் அறிவுறுத்த மாட்டார்கள். அப்படி இருக்க அதிவீரராம பண்டியரான சீவலமாறன்  இழிதொழிலான பிச்சை எடுத்தாவது கல்வியைக் கற்றுக்கொள் என ஏன்  அறிவுறுத்த வேண்டும்.

ஆண்களுக்கு அறிவு (கல்வி), ஆற்றல், புகழ், கொடை, ஆராய்ச்சி, பழிபாவங்கட்கு அஞ்சுதல் ஆகியவை பெருமைக்குரிய குணங்கள் என்று தொல்காப்பியர் சுட்டுகின்றார். இதனை,

பெருமையும் உரனும் ஆடுஉ மேன
                          (தொல்.பொருள்.98)
எனும் நூற்பா பறைசாட்டுகின்றது. இந்நூற்பாவைச் சீவலமாறன் படித்திருக்க வேண்டும்.

சங்க இலக்கிய காலக்கட்டத்தில் மகனைப் பெற்று வளர்ப்பது தாயின் கடமையாகவும்  கல்வியறிவு உடைய சான்றோனாக்குவது தந்தையின் கடமையாகவும் இருந்திருக்கிறது. கடமை என்றால் கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருந்திருக்கிறது. அதனால்தான் தமிழர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கோட்பாட்டினை முன்நிறுத்தி அதன்படித் தங்கள் வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார்கள். இந்த நகர்த்தல்தான் உலக அளவில் தமிழ் மொழிக்கும் தமிழனுக்கும் தனித்த அடையாளத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது என்பதை,

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே 
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே 
                         (புறம்.312:1-2)

எனும் அடிகள் சான்றுபகர்கின்றன. இவ்அடிகளையும் சீவலமாறன் படித்திருக்க வேண்டும்.

இப்பிறப்பில் கற்ற கல்வி ஒருவனுக்குத் தொடர்ந்து ஏழு பிறப்பிலும் துணைசெய்யும் எனும் குறளான,

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு
எழுமையும் ஏமாப் புடைத்து
                                 (குறள்.398)

எனும் குறளைச் சீவலமாறன் படித்திருக்க வேண்டும்.
கற்றவர் புகழை இம்மையிலும் மறுமையிலும் வாழச்செய்வது கல்வியே. கல்வியைப் போல் அறியாமை எனும் நோயைப் போக்கக்கூடிய மருந்து இவ்வுலகில் வேறெதுவும் இல்லை எனும்,

இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாங்காணேங் கல்விபோன்
மம்மர் அறுக்கும் மருந்து
                                   (நாலடியார்.132)
எனும் இவ்அடிகளையும் சீவலமாறன் படித்திருக்க வேண்டும்.

கல்விதான் ஒருவனைப் பெருமைப்பட வைக்கிறது, சான்றோனாக்குகிறது, ஏழு பிறப்புக்கும் துணைவருகிறது, அறியாமை இருளை அகற்றுகிறது என்பதையெல்லாம் படித்துப் படித்து வியந்துபோன சீவலமாறன் அடுத்த தலைமுறைக்கு இச்செய்தியைக் கட்டாயமாகக் கடத்த வேண்டும் எனும் கருத்துடையவனாக இருந்திருக்க வேண்டும். எப்படிக் கடத்துவது, வள்ளுவனின் குறளைப்போல் நறுக்குச் சுறுக்கென்று புத்தியில் உரைக்கும்படி சொல்ல வேண்டும் என எண்ணியிருப்பார். இதன் விளைவுதான்

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே

என்ற பாடல். ஒருவன் செல்வம் இல்லாதவனாக மிகவும் ஏழ்மை நிலையை அடைந்து பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டாலும், அந்த நிலையிலும் கல்வி கற்க வேண்டும் என்பதை இந்த அடிகள் உணர்த்துகின்றன. 

பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற அடிகளுக்குப் பொருளுரைக்கும் பலர் பிச்சை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற நோக்கில் சீவலமாறன் இப்பாடலைப் படைக்க வில்லை. மாறாக, தனக்குத்தெரியாத ஒன்றை அறிந்தவரிடம், தெரிந்தவரிடம் கேட்டுக் கற்றுக்கொள்க என்ற நோக்கத்தில் தான் இப்பாடல் படைக்கப்பட்டு இருக்கின்றன என்கிறார்கள்.

இவர் கூற்றுப்படியே பிச்சை எடுத்துக் கற்க வேண்டும் என்ற நோக்கில் பாடல் படைக்கவில்லை என்றால் ஏன் பிச்சை என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும்? பிச்சை என்ற வார்த்தைக்குப் பதிலாக வேறு வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கலாமே?

பிச்சை என்ற வார்த்தை சங்க இலக்கியமான நற்றிணை.300, குறுந்தொகை.277:3 ஆகிய இரண்டு இடங்களில் பதிவுசெய்யப் பெற்றிருக்கிறது. இரண்டு இடங்களிலும் பிச்சை என்ற பொருளில்தான் பயன்படுத்தப் பெற்றுள்னளன.

அன்றைய சூழலில் கல்வி கற்றவர்கள் அதிகம் இல்லை என்பது ஒரு காரணம் மட்டும் அல்ல பொருளாதாரமும் ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில் கல்வி கற்பதற்குப் பொருளாதாரம் இன்று மட்டுமல்ல அன்றும் பொருளாதாரம் ஒரு தடையாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் பொருளாக, உழைப்பாக இப்படி ஏதோ ஒருவிதத்தில் கொடுத்துதான் கல்வியைக் கற்க வேண்டும் என்ற சூழல் இருந்திருக்கிறது. அதனால்தான் சீவலமாறன் பிச்சை எடுத்தாவது கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தன் பாடலில் பிச்சை என்ற வார்த்தையைப் பயன் படுத்மியிருக்க வேண்டும்.


கல்வி கற்பதற்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருப்பதை அறிந்துதான் கல்வி கற்க தடையாக பொருளாதாரம் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் பிச்சை எடுத்தாவது கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். ஏனெனில் கல்வி கற்றால்தான் வாழ்க்கைச் செம்மையாக வாழ முடியும், நலமாக வாழ முடியும், நல்லது கெட்டதைத் தெரிந்து தெரியாதவற்றைத் தெரிந்து உணர்ந்து வாழ்க்கையை வாழ முடியும் என்ற காரணத்தால் கல்வி அறிவு அவசியம் என்பதை உணர்த்தி இருக்கிறார்.



புதன், 20 மே, 2020

செவ்விலக்கியங்களில் உடல்மொழிப் புனைவும் அறநெறித் திறனும்.Sevvilakkiyagngalil Uadalmozhi Punaivum Araneri Thiranum


முனைவர் ந.இராஜேந்திரன் Dr N.Rajendran

தமிழ் நாற்றங்கால் பதிப்பகம்
தமிழ் நாற்றங்கால் வலைக்காட்சி
சங்க இலக்கியத்தில் போரெதிர்வும் இருப்பும்.
செவ்விலக்கியங்களில்  
உடல்மொழிப் புனைவும் அறநெறித் திறனும்.

Thamizh Naatragngaal Publication
Sanga ilakkiyathil Porethirvum Iruppum

Sevvilakkiyagngalil

Uadalmozhi Punaivum Araneri Thiranum