வெள்ளி, 18 மார்ச், 2022

மந்திர மாவது நீறு , மாசில் வீணையும் மாலை மதியமும், ஏழிசையாய் இசைப்பயனாய்

 

திருவாலவாய்

பண் : காந்தாரம்

பாடல் எண் : 1

 

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

-    திருஞானசம்பந்தர்

 

பொழிப்புரை :

சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

முக்கூடற் பள்ளு : மழை அறிகுறிப் பாடல் - ஆற்று வெள்ளம் நாளை வரத் (30)

 

 

நூல் : முக்கூடற் பள்ளு

சூழல் :  மழை அறிகுறிப் பாடல் (30)

(மழை வரும் நேரம், பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தமாகப் பாடும் ‘சிந்து’)

 

பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கூடற் பள்ளு, உழவையும் அத்தொழிலை வாழ்வாகக் கொண்டோரையும் துல்லியமாகக் காட்டுவது. அதிலும், அப்பாடல்களில் வரக்கூடிய ஓசையும் நயமும் அற்புதமானவை. திருநெல்வேலி ஜில்லாவில் சீவலப்பேரி என்று வழங்கும்  முக்கூடலில் கோயில் கொண்டிருக்கும் அழகர்மீது பாடப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. தாமிரபரணி, சிற்றாறு, கயத்தாறு ஆகிய மூன்றும் கலக்குமிடமே முக்கூடல்.

வியாழன், 17 மார்ச், 2022

நாலாயிர திவ்யப் பிரபந்தம், மாயவனை மதுசூதனனை - பெரியாழ்வார் (431), ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஆண்டாள் (497)


     நாலாயிர திவ்வியப் பிரபந்தம் திருமாலைக் குறித்துப் பாடப்பட்ட பக்தி பாடல்களின் தொகுப்பாகும். கி.பி.6-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.9-ஆம் நூற்றாண்டு வரை வைணவ சமயத்தில் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட இந்தப் பாடல்களை, 10-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாள மாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படிச் செய்தார்.