Appa Kavitha லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Appa Kavitha லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

அப்பா கவிதை (சோட்டைக்கு ஒரு நாள்) Appa Kavitha

 

எவ்வளவு

வலியும் வேதனையும் இருந்திருக்கும்

இந்த வார்த்தையை  உதிர்க்க


அப்படி 

என்ன கேட்டுவிட்டார் என்னிடம்?

உன்னைப் பார்த்து ரெம்ப நாளாச்சு

சோட்டைக்கு ஒரு நாள்

வந்து தங்கிட்டுப் போடா - என்றார்


என் மகனுக்கு

உடல்நிலை சரியில்லை

அடுத்த மாதம் வரட்மா - என்றேன்


இப்படித் தானே

நானும் உன்னை வளர்த்தேன்

என்றதோடு  அணைந்துவிட்டது கைபேசி

                                               - இளையவன் தமிழ் ( ந.இராஜேந்திரன்)