புதன், 22 செப்டம்பர், 2021

மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது

 

தமிழ்விடு தூது

மதுரைச் சொக்கநாதரிடம் காதல் கொண்ட தலைவி தன் காதலைத் தெரிவித்து அவர் இசைவறிந்து வருமாறு தமிழைத் தூதனுப்பி வைப்பதாகப் பாடப் பெற்றுள்ளது. 268 கண்ணிகள் இதில் உள்ளன. ஆனால் தலைவியின் காதலைச் சொல்வதோ, மதுரைச் சொக்கநாதரின் பெருமையைச் சொல்வதோ முக்கியமல்ல. தமிழ்தான் இந்த நூலின் தலைமைப் பொருள். துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க மறவாதே தூது சொல்லி வா என்று வழக்கமாகத் தலைவி தூது விடும் பாங்கில் அமைந்தாலும், தமிழே நம் கவனத்தை யெல்லாம் ஈர்த்துக் கொள்கிறது.

 

தமிழ்விடு தூது சிறப்பு

தமிழின் பெருமையை பாட கவிஞர்கள் கையாளும் உத்திகள் பற்பல. கவிதை அதற்கு ஒரு கருவி, கிளி, அன்னம், விரலி, பணம், தந்தி என்று பல தூதுு வாயில்களை அறிந்துள்ளோம். ஆனால் தமிழையே தூதுப் பொருளாக்கிிி உள்ளது தமிழ்விடு தூது. தமிழின்  இனிமை,இலக்கிய வளம், சுவை,அழகு, திறன், தகுதி, ஆகியவற்றைை இச்சிற்றிலக்கியத்தில் தெளிவாக விளக்கியுள்ளது.

வியாழன், 16 செப்டம்பர், 2021

பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள்

 

 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.(குறள்.20)

 

 

01. *அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.

 

02. *அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.

 

03. *ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு

 

04. *ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.

 

05. *இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.

 

06. *உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.

 

07. *ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.

 

08. *ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.

 

09. *ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.

 

10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.

திங்கள், 13 செப்டம்பர், 2021

தமிழர் இசைக் கருவிகள் - திருமுறைகளில் இசைக்கருவிகள்

 


தமிழர் இசைக் கருவிகள்

முனைவர் ந.இராஜேந்திரன்

 

மனிதனின் உள்ளத்தைத் தன்வயமாக்கி நிரப்பி அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படும் ஆற்றலே கலை.

 

கூடுதல் குறைதல் இன்றி எப்பொருளும் அளவோடு அமைந்திருப்பின் அந்த அமைப்புக் கண்ணைக் கவர்வது இயல்பு. கண்ணையும் கருத்தையும் கவரும் அந்த அமைப்புப் பாராட்டத்தக்கதாகும். அதனைக் கலை அறிவோடு அமைக்கப்பட்டது என்று நாம் பாராட்டுகிறோம். எனவே கலை என்பது அளவும் பொருத்தமும் தன்னுள் அடக்கி நிற்பது. அதே சமயத்தில் உள்ளத்திற்கு உவகை ஊட்டுவது. உள்ளத்தை தன்பால் இருப்பது.

 

இசையின் சிறப்பு

இசை என்னும் சொல் இசைவிப்பது - தன் வயப்படுத்துவது எனப் பொருள்படும் இசை கல் மனத்தையும் கரைந்துகச் செய்யும். கற்போரும் மற்றொரும் இசையின் வயப்பட்டே நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசையைக் கேட்டு இன்புறாத உயிர்கள் இல்லையென்றே கூறலாம். விலங்குகள், பறவைகள், செடிகள், பாம்பு முதலிய உயிர்கள் இசையில் இன்பமடைகின்றன. பால் வேண்டி அழும் பசுங் குழவியும் இசை வயப்பட்டுப் பாலையும் பசியையும் மறந்து கண்கள் செருக மகிழ்ச்சியடைகின்றது. இசையின் பயப்படாதார் அன்பின் வயப்படார் என்றே கூறுதல் அமையும். இசையின் அருமையையும் பெருமையையும் ஓர்ந்தே தமிழர் இசைத் தமிழை முத்தமிழுள் நடு நாயகமாக வைத்துள்ளனர். தமிழ் இலக்கிய நூல்கள் இசைத் தமிழிலேயே இருக்கின்றன என்பர. மா.இராசமாணிக்கனார் (தமிழகக் கலைகள், 2009:55)

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

ஞாபகம் - அப்பா, இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)

 மகனின் பிஞ்சுவிரல் பற்றி

நடக்கும்போதெல்லாம்

என்னைப் பின்னுக்குத்தள்ளி

முந்திச் செல்கின்றன

என்

அப்பாவின் ஞாபகங்கள்

     - இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)



செவ்வாய், 7 செப்டம்பர், 2021

கவிதை, kavithai, பேசும் தருணம், காதல்

 


        உன்னிடம்

        பேசும்போது மட்டும்

        சம்பந்தமில்லாத

        ஏதோ ஒன்றைப் பார்த்துதான்

        பேசவேண்டியிருக்கிறது

        காதலின் மகத்துவம்

        மனதுக்குத் தெரியும்

        கண்ணுக்குத் தெரியுமா?

                              - இளையவன் தமிழ் (ந.இராஜேந்திரன்)



ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

சமூதாயம் - கடங்காரக் கடவுள், கவிதை (kavithai )

 

உன்னுடைய மாட்டுக்கு

மூக்கணாங்கயிறு பூரூவதும்

கொட்டுக்கால் அடிப்பதும்

இழுத்துக் கட்டுவதும்

என் வேலையில்லை.


அடங்காத மாட்டை

ஏர்க்காலில் பூட்டுவதும்

வண்டி இழுக்கப் பழக்குவதும்

பழகாத மாட்டுக்குத்

தார்க்குச்சி எடுப்பதும்

என் வேலையில்லை


மாட்டைப் பழக்குவதையே

முழுநேர வேலையாகச் செய்யும்

ஒரு கூட்டம் உண்டு என்பதற்காக

நானும் அப்படியே இருக்க வேண்டுமென

நீ

நினைப்பது அபத்தம்.