வான்இன்று
அமையாது ஒழுக்கு.(குறள்.20)
01.
*அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
02.
*அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
03.
*ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04.
*ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.
05.
*இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்
தேக்கம்.
06.
*உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
07.
*ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
08.
*ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
09.
*ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
11
*கட்டுந் கிணக்கிணறு* (Built-in -well) – சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால்
சுவர்கட்டிய கிணறு.
12.
*கடல்* - (Sea) சமுத்திரம்.
13.
*கம்வாய் (கம்மாய்)* -(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
14.
*கலிங்கு* (கழுங்கு) - (Sluice with many Ventures)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல்
இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய்
உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. *கால்* – (Channel) நீரோடும் வழி.
16.
*கால்வாய்* - (Supply channel to a tank ) ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும்
வழி.
17.
*குட்டம்* – (Large Pond) பெருங் குட்டை.
18.
*குட்டை* - (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
19.
*குண்டம்* - (Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
20.
*குண்டு* – (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21.
*குமிழி* – (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த
குடை கிணறு.
22.
*குமிழி ஊற்று* – (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து
வரும் ஊற்று
23
. *குளம்* - (Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.
24.
*கூவம்* – (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
25
. *கூவல்* – (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
26.
*வாளி* (strea |m) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச்
செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27.
*கேணி* –( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு.
28.
*சிறை* - (Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
29.
*சுனை* - (Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
30.
*சேங்கை* – (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்.
31.
*தடம்*(தடாகம்) - (Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட
குளம்.
32
. *தளிக்குளம்* - (tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி
போன்ற் நீர் நிலை.
33.
*தாங்கல்* – (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
34.
*திருக்குளம்* – (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி
எனவும் பெயர் பெறும்.
35.
*தெப்பக்குளம்* -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய,
தெப்பம் சுற்றி வரும் குளம்.
36.
*தொடு கிணறு* - (Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
37.
*நடை கேணி* – (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த
பெருங் கிணறு.
38.
*நீராவி* - (Bigger tank at the center of Building hall) மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம்.
ஆவி என்றும் கூறப்படும்.
39.
*பிள்ளைக்கிணறு* -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40.
*பொங்கு கிணறு* - (Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும்
கிணறு.
41.
*பொய்கை* - (Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர்
நிலை.
42.
*மடு* - (Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
43.
*மடை* - (Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
44.
*மதகு* - (Sluice with many ventures) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை
அடைப்பும் திறப்பும் உள்ளது.
45.
*மறு கால்* - (Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
46.
*வலயம்* - (Round tank) வட்டமாய் அமைந்த குளம்.
47
*வாய்ககால்* - (Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்.
47
*வகை நீர் நிலைகளையும் தன் சுயநலத்திற்காக அழித்தால் மனித எதிர் காலம் எங்கே..?*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading