திங்கள், 13 செப்டம்பர், 2021

தமிழர் இசைக் கருவிகள் - திருமுறைகளில் இசைக்கருவிகள்

 


தமிழர் இசைக் கருவிகள்

முனைவர் ந.இராஜேந்திரன்

 

மனிதனின் உள்ளத்தைத் தன்வயமாக்கி நிரப்பி அவ்வளவோடு நில்லாமல் வெளிப்படும் ஆற்றலே கலை.

 

கூடுதல் குறைதல் இன்றி எப்பொருளும் அளவோடு அமைந்திருப்பின் அந்த அமைப்புக் கண்ணைக் கவர்வது இயல்பு. கண்ணையும் கருத்தையும் கவரும் அந்த அமைப்புப் பாராட்டத்தக்கதாகும். அதனைக் கலை அறிவோடு அமைக்கப்பட்டது என்று நாம் பாராட்டுகிறோம். எனவே கலை என்பது அளவும் பொருத்தமும் தன்னுள் அடக்கி நிற்பது. அதே சமயத்தில் உள்ளத்திற்கு உவகை ஊட்டுவது. உள்ளத்தை தன்பால் இருப்பது.

 

இசையின் சிறப்பு

இசை என்னும் சொல் இசைவிப்பது - தன் வயப்படுத்துவது எனப் பொருள்படும் இசை கல் மனத்தையும் கரைந்துகச் செய்யும். கற்போரும் மற்றொரும் இசையின் வயப்பட்டே நிற்பர். அன்பைப் பெருக்கி ஆருயிரை வளர்ப்பது இசை. இசையைக் கேட்டு இன்புறாத உயிர்கள் இல்லையென்றே கூறலாம். விலங்குகள், பறவைகள், செடிகள், பாம்பு முதலிய உயிர்கள் இசையில் இன்பமடைகின்றன. பால் வேண்டி அழும் பசுங் குழவியும் இசை வயப்பட்டுப் பாலையும் பசியையும் மறந்து கண்கள் செருக மகிழ்ச்சியடைகின்றது. இசையின் பயப்படாதார் அன்பின் வயப்படார் என்றே கூறுதல் அமையும். இசையின் அருமையையும் பெருமையையும் ஓர்ந்தே தமிழர் இசைத் தமிழை முத்தமிழுள் நடு நாயகமாக வைத்துள்ளனர். தமிழ் இலக்கிய நூல்கள் இசைத் தமிழிலேயே இருக்கின்றன என்பர. மா.இராசமாணிக்கனார் (தமிழகக் கலைகள், 2009:55)

 

நடனத்திற்கும் நாடகத்திற்கும் இசை இன்றியமையாதது. மாதவி ஆடிய நடன அரங்கில் இசையாசிரியர்கள் பலர் இருந்தனர் என்று சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது. பெண்கள் உலக்கை கொண்டு நெல் குற்றும் பொழுதும் பந்து விளையாடும் பொழுதும் ஊசலாடும் பொழுதும் பாடிக்கொண்டே செயல்பட்டனர் என்பதைச் சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதை உணர்த்துகிறது. கடற்கரை ஓரத்தில் இருந்து இன்பமாகப் பாடும் பாடல் வரி பாடல் எனப்பட்டது. அது கானல்வரி எனவும் பெயர் பெற்றது. அப்பாடல்களைச் சிலப்பதிகாரத்தில் படித்து மகிழலாம். இதனை,

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப

மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்

கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்தாய் வாழி காவேரி

கருங்க யற்கண் விழித்தொல்கி

நடந்த எல்லா நின்கணவன்

திருந்து செங்கோல் வளையாமை

அறிந்தேன் வாழி காவேரி

                    (சிலம்பு, கானல்வரி)

என்கிறது சிலப்பதிகாரம்.

 

அந்தவகையில் இசையைப் பற்றி அறிந்திருந்த தமிழர்கள் தாங்கள் இயற்றிய ஒவ்வொரு படைப்பிலும்  இசையின் நுணுக்கத்தையும் இசைக் கருவிகளையும் பதிவுசெய்துள்ளனர்.

 

திருமுறைகளில் குறிப்பிடப்படும் இசைக்கருவிகளின் பட்டியலைக் கீழ்காணும் அடைவுகள் தெளிவுபடுத்துகின்றது.

 

 

1.  ஆகுளி

2.  இடக்கை

3.  இலயம்

4.  உடுக்கை

5.  ஏழில்

6.  கத்திரிகை

7.  கண்டை

8.  கரதாளம்

9.  கல்லலகு

10.கல்லவடம்

11.கவிழ்

12.கழல்

13.காளம்

14.கிணை

15.கிளை

16.கின்னரம்

17.குடமுழா

18.குழல்

19.கையலகு

20.கொக்கரை

21.கொடுகொட்டி

22.கொட்டு

23.கொம்பு

24.சங்கு

25.சச்சரி

26.சலஞ்சலம்

27.சல்லரி

28.சிலம்பு

29.தகுணிச்சம்

30.தக்கை

31.தடாரி

32.தட்டழி (தோலிசைக் கருவிகளில் ஒன்று, திருச்செந்துறைக் கோயில் கல்வெட்டு குறிக்கிறது)

33.தத்தளகம்

34.தண்டு

35.தண்ணுமை

36.தமருகம்

37.தாரை

38.தாளம்

39.துத்திரி

40.துந்துபி

41.துடி

42.தூரியம்

43.திமிலை

44.தொண்டகம்

45.நரல் சுரிசங்கு

46.படகம்

47.படுதம்

48.பணிலம்

49.பம்பை

50.பல்லியம்

51.பறண்டை

52.பறை

53.பாணி

54.பாண்டில்

55.பிடவம்

56.பேரிகை

57.மத்தளம்

58.மணி

59.மருவம்

60.முரசு

61.முரவம்

62.முருகியம்

63.முருடு

64.முழவு

65.மொந்தை

66.யாழ்

67.வட்டணை

68.வீணை

69.வீளை

70.வெங்குரல்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading