நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 3 நவம்பர், 2024

நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

 

நாடகங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

 


முன்னுரை

கலைகளின் அரசி என அழைக்கப்படுவது நாடகமாகும். தமிழ் மொழி இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது.  இவற்றுள் நாடகம் தொன்மையும், தனிச்சிறப்பும் வாய்ந்ததாகும். இயலும், இசையும் கலந்து கதையைத் தழுவி நடித்துக்காட்டப்படுவது நாடகமாகும். எட்டு வகையான உணர்ச்சிகளை ஒருவர் தம் மெய்ப்பாடு தோன்ற நடிப்பது நாடகத்தின் தனிச்சிறப்பாகும். தெருக்கூத்துகளாக இருந்து, மேடைநாடகங்களாக மாறி, இலக்கிய நாடகங்களாக மலர்ச்சி பெற்ற தமிழ் நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி குறித்து இக்கட்டுரை மதிப்பீடு செய்கிறது.

நாடகம் - சொல் விளக்கம்

நாடகம் என்பதனைக் குறிக்கும் Drama என்ற சொல், கிரேக்கச் சொல்லின் அடியாகப் பிறந்தது. ட்ரமோனியன் (Dramonian) என்ற கிரேக்கச் சொல்லே இதன் மூலமாகும். இதன் பொருள் ‘ஒன்றைச் செய் அல்லது ஒன்றைப் போல நடித்துக் காட்டு என்பதாகும்.

நாடகம் என்று வழங்குகிற தமிழ்ச் சொல்லுக்கு அறிஞர்கள் பலவாறு பொருள் விளக்கம் தருகின்றனர். ‘நாட்டின் சென்ற காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதால் நாடு + அகம் = நாடகம் என்று ஆயிற்று என்று அவ்வை சண்முகம் கூறுவார். ஆனாலும் நாடகம் என்ற சொல் தொல்காப்பியம், சங்க இலக்கியம், காப்பியங்கள் ஆகியவற்றில் வரும் இடங்களை நோக்கினால் இன்று நாம் நாடகம் என்பதற்குக் கொள்ளும் பொருளில், அன்று கூறப்படவில்லை என்று அறியலாம். நாட்டியம் என்ற கருத்திலேயே காணப்படுகிறது.

நாடகம் என்ற சொல்லுக்கு வேர்ச்சொல் ‘நட என்று பாவாணர் கூறுகிறார். ‘நட’ என்னும் வேர்ச் சொல்லிலிருந்து நடனம், நாட்டியம், நாடகம் என்பன ஆட்டத்தை அறிவிக்கும் மறுபெயர்களாக வந்தன என்பார். நடம், நட்டம் என்ற சொற்களும் ஆடலைக் குறிப்பன.