திங்கள், 19 ஜனவரி, 2026

பழமொழி நானூறு முன்றுறை அரையனார் பாடல் எண் - 32, 244, 360, 361, 372

 


பழமொழி நானூறு

முன்றுறை அரையனார்


பழமொழி நானூறு சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இதன் காலம் கி. பி. 4ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. இந்நூலில் 34 தலைப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. வரலாற்றுக் குறிப்புகளும் புராணக் குறிப்புகளும் இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

 

விழுமியம் - வாழ்வியல் அறம்

1. தன்னை அறியும் தலைவன்

பொற்பவும் பொல்லா தனவும், புணர்ந்திருந்தார்

சொல் பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்

அரி தாய்ப் பரந்து அகன்ற கண்ணாய்! - அறியும்,

பெரிது ஆள்பவனே பெரிது. . . . .[31]

 

வில்லைப்போன்ற புருவத்தின் கீழ்ச் செவ்வரி படர்ந்திருக்கின்ற மிகவும் அகன்ற கண்ணை உடையவளே! அறிவுடையோர் சிறந்த செயல்களையே செய்ய விரும்புவர்; அதனால், அவரே அதனை அறிந்து செய்பவராவர்; அவர்க்கு எவரும் நன்மை தீமைகளைப் பற்றிச் சொல்லுதல் வேண்டாம். 'அறியும், பெரிதாள்பவனே பெரிது' என்பது பழமொழி.

கருத்து:

கற்றறிந்தவன் எல்லாவற்றையும் தானே பகுத்தறிந்து நடப்பான்.

2. வரி பெறும் முறை

பொருத்தம் அழியாத பூந் தண் தார் மன்னர்

அருத்தம், அடி நிழலாரை வருத்தாது,

கொண்டாரும் போலாதே, கோடல்! அது ன்றோ,

வண்டு தாது உண்டுவிடல். . . . .[244]

செங்கோல் வளையாத அழகிய குளிர்ந்த தாரினை அணிபவரான மன்னர்கள், ம் அடி நிழலிலே வாழும் குடிமக்களிடம்  மழை இல்லாத காலங்களில் வரி வசூலிக்காமலும் பொருள் உள்ள காலத்தில் காலமறிந்து பக்குவமாக வரி வசூலித்துக் கொள்வதுதான், வண்டினம் பூவைச் சிதைக்காமல் அதிலுள்ள தேனைக் குடிப்பதற்குச் சம்மாகும். "வண்டூ தாதுண்டு விடல்' என்பது பழமொழி.

கருத்து:

அரசர்கள் குடிகளிடத்திலிருந்து வாங்கும் வரிப் பொருள்களைக் காலமறிந்து வருத்தாது வாங்குக

3. இம்மை மறுமை இன்பம்

ஈனுலகத்து ஆயின், இசை பெறூஉம்; அஃது இறந்து,

ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன்

நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும்

வேள் வாய் கவட்டை நெறி. . . . .[360]

இரண்டு உலத்திலும் புகழ் பெற நினைக்கும் ஒருவர் நல்ல அறசெயல்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்கின்ற போது  இவ்வுலகை விட்டு நீங்கி மறுமை லகத்திற்குச் சென்றாலும் அவ்வுலகமும் இனிதாக அமையும். ஆகையால் நாள்தோறும் நன்மையைக் காக்க்கும் அறங்களைச் செய்கின்றவனுக்கு இரண்டு உலகிலும் இன்பமும் கவட்டை நெறிபோல இன்பம் கிடைக்கும்.

கருத்து:

இம்மை மறுமை இன்பங்களை அறம் எய்துவித்தலால், அதனை நாள்தோறும் செய்க.

4. அறம் செய்க

மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையை

ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து,

நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை,

நாய் காணின் கல் காணாவாறு. . . . .[361]

நாம் இறக்கும் முன் பல நல்ல செயல்களால் வரும் அறங்களைச் செய்யத் தவறியவர்களுக்கு  பிற்காலத்தில் செய்வோம் என்று நினைத்திருந்து நோய்கள் சூழ்ந்து நின்று தமக்கு இறுதியை ஆராயும்பொழுது தாம் கூறியபடி அறம் செய்வாரைக் காணாதிருத்தல் நாயைக் கண்ட பொழுது கல் மறைதலை போல் ஆகும்.

கருத்து:

அறத்தைப் பொருள் பெற்றபொழுதே ஆராய்தலின்றி உடனே செய்க.

5. வறுமையில் செம்மை

மடங்கப் பசிப்பினும் மாண்புடை யாளர்

தொடங்கிப் பிறருடைமை மேவார் - குடம்பை

மடலொடு புள்கலாம் மால்கடல் சேர்ப்ப

கடலொடு காட்டொட்டல் இல். . .[372]

தாழை மரத்தில் இருக்கும் கூட்டில் பறவைகள் சண்டையிட்டுகொள்ளும் இருண்ட கடல் சூழ்ந்த  சேர்ப்பு நிலத்தின் வேந்தனே!

கடலில் துரும்பு ஒட்டாது. அதுபோல,

உடல் முழுவதும் செயலற்று அடங்குமாறு பசித்தாலும் மாண்பு உடையவர் பிறர் உடைமைகளை விரும்ப மாட்டார்கள். எண்ணவும் தொடங்க மாட்டார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading