ஔவையார் இயற்றிய நீதி நூல் மூதுரை.
பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (முதுமை + உரை) என
அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.
இந்நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 31
வெண்பாப் பாடல்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை
வலியுறுத்துகிறது.
விழுமியம் :
நல்லார் குணம்
1.
நல்லாரைக்
காண்பதுவும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. (8)
நல்ல பண்பு உடையவர்களைக்
காண்பது நன்மை தரும்.
நல்லவர்களின்
அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.
நல்லவர்களின்
நற்பண்புகளை அடுத்தவரிடம் கூறுவது நன்மை தரும்.
நல்லவர்களுடன் எப்போதும் நட்புக்கொண்டு வாழ்வது நன்மை தரும்.
2.
நெல்லுக்கு
இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் -
தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்
பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை (10)
உழவர்கள்
நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும் புல்லுக்கும் பயனைத் தரும்.
அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை எல்லாருக்கும் பயனைத் தரும்.
3.
பண்டு
முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமி போனால் முளையாதாம்
கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது
அளவின்றி
ஏற்றம் கருமம் செயல் (11)
முதலில்
முளைப்பது அரிசிதான் என்றாலும்,
உமி நீங்கினால் அது முளைக்காது;
அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி பெரிய காரியங்களைச் செய்து முடிக்க முடியாது.
4.
கவையாகிக்
கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்லமரங்கள் - சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான்
குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம் (13)
கிளைகளோடும், கொம்புகளோடும்
காட்டில் நிற்பவை மரங்கள் அல்ல.
சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில் எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்.
5.
அடக்கம்
உடையார் அறிவிலர் என்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்
தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்
வாடி இருக்குமாம் கொக்கு. (16)
நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக் கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக் கொண்டிருக்கும். எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்கள் தனக்குரிய காலம் வரும்வரை அமைதியாகக் காத்திருப்பார்கள். அதைக்கண்டு அவர்களை எளிமையாக வென்று விடலாம் என்று பிறர் நினைக்கக்கூடாது.
6.
சீரியர்
கெட்டாலும் சீரியரே,
சீரியர் மற்(று)
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?
– சீரிய
பொன்னின் குடம்உடைந்தால்
பொன்னாகும் என்னாகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால். (18)
தங்கத்தால் செய்த பானை உடைந்து
சிதறினாலும் தங்கமாகவே இருந்து மீண்டும் உதவும். அதுபோலச் சிறந்த பண்பாளர் வறுமை அடைந்தாலும் தனது நல்ல குணத்தில் இருந்து தவறாமல் பிறருக்கு உதவுவார்.
ஆனால், மண்ணால் செய்த
குடம் உடைந்தால் அதற்கு எந்த மதிப்பும் இருக்காது
அதுபோலத் தீயவரால் பிறருக்கு எந்த பயனும் இருக்காது.
7.
உடன்பிறந்தார்
சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி –
உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே
பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு. (20)
நோய் நம்முடனே பிறப்பதால் உறவு என்று நினைக்கக் கூடாது. அது நம்மைக் கொன்றுவிடும். எனவே உடன் பிறந்தோர் அனைவரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது. எங்கோ பெரிய மலையில் இருக்க
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்ற
சிறு கோபம் வந்தாலே தீயோர் பிளந்து போட்ட கல்லைப் போலப் பிரிந்து விடுவர். பெரும் கோபத்தால் பிரிந்தாலும் நல்ல பண்புடையவர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். நல்ல பண்புடையவரின் கோபம், நீரில் எய்த அம்பால் உண்டான பிளவைப் போன்றது.
9.
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம்
சேர்தாற்போல்
கற்றாரைக்
கற்றாறே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை
மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம். (24)
குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை சென்று சேரும். அதுபோல, கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்ந்து உண்பதைப் போல, கல்வி அறிவில்லாத மூடர்களுடன் மூடர்களே சேர்வர்.
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன்
சிறப்புடையன் – மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால்
சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு. (26)
மன்னனையும்
குற்றம்
இல்லாமல் கற்ற அறிவுடையவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவரே சிற்றப்புடையவர். மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு
உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. ஆனால் கற்றவருக்கு அவர் செல்லும் இடமெல்லாம் சிறப்பு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading