திங்கள், 21 செப்டம்பர், 2020
பெருங்கற்காலத்தைச் சார்ந்த இடங்கள் - தயிர்ப்பாளையம், பேரோடு Megalithic Places - Sithode, Thayirpalayam, Perodu Erode Distric
புதன், 16 செப்டம்பர், 2020
திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின் தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம், K.P. Aravanan's History of the Tamil People for Performance - Nayakkar Period
திறனாய்வு நோக்கில் க.ப.அறவாணனின்
தமிழ் மக்கள் வரலாறு - நாயக்கர் காலம்
முனைவர் ந.இராஜேந்திரன்
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (த.)
கோயமுத்தூர் - 28
“வரலாறு உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும்” என்ற க.ராஜனின் (தொல்லியல் நோக்கில் சங்க காலம்,ப.1) கூற்றுக்கிணங்க க.ப.அறவாணன் அவர்கள், தமிழ் மக்கள் வரலாறு நாயக்கர் காலம் எனும் நூலினை மிகுந்த சிரத்தையோடு உண்மைச் சான்றுகளைத் திரட்டி வரலாற்றுப் பின்புலத்தோடும் சமூகவியல் பின்புலத்தோடும் டிசம்பர் 2013 ஆம் ஆண்டில் வெளிக்கொணர்ந்துள்ளார். இவ்விரு அணுகுமுறைகளை உள்வாங்கி எழுதப்பெற்ற இந்நூலினைக் கட்டமைப்பு அடிப்படையிலும் கருத்தியல் அடிப்படையிலும் பிரித்து ஆராயும் முகமாக இக்கட்டுரை அமைகிறது.
கட்டமைப்பு நோக்கு
2013 இல் தமிழ்க் கோட்ட வெளியீடாக வெளிவந்த இந்நூல் 302 பக்கங்களையும் 14 தலைப்புகளையும் 11 பின்னிணைப்புகளையும் உள்ளடக்கியதாக நூல் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இந்நூலினைச் செம்மையுற வெளிக்கொணர 509 வரலாற்றுத் தரவுகளைப் பல்வேறு இலக்கியங்களில் இருந்தும் கல்வெட்டு, செப்பேடு, வெளிநாட்டார் குறிப்புகளில் இருந்தும் தேடித் தொகுத்துள்ளார். தொகுத்த கருத்துக்களை 14 தலைப்புகளாக வகைப்படுத்தி தலைப்பின் கீழ் கால வரிசைப்படி உட்தலைப்புகளைக் கொடுத்துக் கருத்துக்களைத் தேவையான இடங்களில் விரித்தும் சுருக்கியும் பதிவுசெய்துள்ளார். அத்தலைப்புகளும் உட்பிரிவுகளின் எண்ணிக்கையும் பின்வருமாறு,
ஞாயிறு, 6 செப்டம்பர், 2020
எட்டிசேரி, நாகமுகுந்தன்குடியில் கண்டெடுக்கப்பட்ட தாங்கிகள் Itticherry, Nagamugunthangudi
வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020
கைமாறு (உப்புமூட்டை)
கைமாறு
உப்புமூட்டை
முனைவர் ந.இராஜேந்திரன்
அப்பா இருந்தபோது அவருக்கு
நான் செய்ய நினைத்தவற்றில் செய்யாமல் போனது அதிகம். அதன் வருத்தமும் அப்பாவோடு இருந்த
பொழுதுகளும் அடிக்கடி என் மனக்கிடங்கில் மேலிட்டுக்கவிதையாக உருமாறின. உருமாறியக் கவிதைகளைத்
தொகுத்து அப்பாவின் நினைவாக நூலாக்கம் செய்துகொண்டிருந்தேன். வகுப்பில் அப்பா பற்றிப்
பேசிக்கொண்டிருந்தபோது நான் அவருக்காக எழுதிய ஒரு கவிதையைப் படித்துக்காண்பித்தேன்.
மறுநாள் காலை மாணவி ஒருவர் அவர் அப்பாவை நினைத்து ஒரு கவிதை எழுதி வந்து என்னிடம் கொடுத்தார்.
படித்துப் பார்த்தேன். என்னைப் போலவே அவருக்கும் அப்பா இல்லை என்பதை உருக்கமாகப் பிரதிபலித்தது
அக்கவிதை. இதேபோல் எத்தனை மாணக்கர்கள் தங்கள்
அப்பாவைப் பிரிந்தும் அப்பா இல்லாமலும் வேதனையோடு
வாழ்கிறார்கள். அவர்களின் வலிகளையும் உணர்வுகளையும்
இந்நூலின்வழிப் பறைசாற்ற வேண்டுமென எண்ணியதின் விளைவே இத்தொகுப்பு.
இந்நூலில் என்னோடு கைகோர்த்துப் பயணித்திருக்கும் ஏனைய கவிஞர்களுக்கும், நல்லதொரு அணிந்துரை வழங்கிய நண்பர் முதுமுனைவர் பகவதிசுந்தரம் சிவமாருதி அவர்களுக்கும் என் உளங்கனிந்த நன்றி.