சிறுபஞ்சமூலம்
காரியாசான்
பதினெண்
கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றானது சிறுபஞ்சமூலம். இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக
102 பாடல்களைக் கொண்டுள்ளது. சிலர் 97 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளது என்றும் கூறுவர்.
இந்நூலை இயற்றியவர் காரியாசான் ஆவார். இவரின் ஒவ்வொரு பாடலும் நீதி புகட்டுவதற்காக
எடுத்துக்கொண்ட கருப்பொருள் தொடர்பாக ஐந்து செய்திகளை எடுத்துக்கூறுகிறது. அனைத்துப்
பாடல்களிலும் ஐந்து செய்திகள் இருப்பதில்லை. ஐந்து என்னும் எண்ணுத்தொகைகப் பதினைந்து
இடங்களில்தான் உள்ளன. அவை, (22, 39, 40, 42, 43, 47, 51, 53, 57, 60, 63, 68, 83,
92, 92).
நூல் பெயர்க்காரணம்
பஞ்சம்
என்பதற்கு ஐந்து என்று பொருள், மூலம் என்பதற்கு வேர் என்று பொருள். கண்டங்கத்தரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி
வேர், பெருமல்லி வேர், நெருஞ்சில் வேர் ஆகிய ஐநது வேர்களான மருந்து உடலட நோயைத்
தீர்ப்பதுபோல, மனித மனதை மேம்படுத்தும் ஐந்து நீதிக் கருத்துகளை நான்கு வரிகளில் எடுத்துரைப்பது
இந்நூலின் தனிச்சிறப்பாகும். இந்நூலின் சிறப்பினை,
சிறுவழு
துணைவேர், சின்நெருஞ்சி மூலம்
சிறுமல்லி
கண்டங் கத்தரிவேர் - நறிய
பெருமல்லி
ஓரைந்தும் பேசுபல்நோய் தீர்க்கும்
அரிய
சிறுபஞ்ச மூலம்.
எனும் பழம்பெரும் பாட்டால்
அறியலாம்.
காரியாசான்
சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி
என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர். இவர் மாக்காயன்
என்பவருடைய மாணவர். ‘மழைக்கை மாக்காரி யாசான்’ என்ற தொடர் நூலாசிரியர்
கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது. இவரது காலம் நான்காம் நூற்றாண்டு. ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால்
அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்பதை அறியலாம். இந்நூலை இயற்றிய காரியாசானும் ஏலாதி
நூலை இயற்றிய கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணாக்கர் என்பது நினைவில் கொல்லத்தக்க செய்தியாகும்.
பாடல் - 04
கல்லாதான் தான் காணும்
நுட்பமும், காது இரண்டும்
இல்லாதாள் ஏக்கழுத்தம்
செய்தலும், இல்லாதான்
ஒல்லாப் பொருள் இலார்க்கு
ஈத்து அறியான் என்றலும்,
நல்லார்கள் கேட்பின் நகை.
படிக்காத ஒருவன் ஆராய்ந்து கூறும் கருத்து நுண்மைத் தன்மை உடையது என்று கூறுவதையும், காதிரண்டும் இல்லாதாதால் அழகுடையேன் என நினைத்துக் கூறுவதையும், பொருள் இல்லாதவன் இல்லாதவற்கு ஈய்வது அறியான் என்று கூறுவதையும், ஒருவன் தன்னிடம் இல்லாத பொருளைக் கொடுப்பேன் என்று கூறுவதையும் அறிவுடைய நல்லவர் கேட்டால் சிறிப்பார்கள்.