வெள்ளி, 27 டிசம்பர், 2024

அற்புதமான மனிதரைச் சந்தித்தேன்.

 




இன்று (26.12.2024) ஒரு அற்புதமான மனிதரைச் சந்தித்தேன். அவர் பெயர் திரு.உதயன். சென்னையில் வசிப்பவர், சென்னையில் பணிபுரிவரும்கூட. இவரை இதற்கு முன்பு சந்தித்ததில்லை. இன்றுதான் நண்பர் திரு.அரிகரசுதன் அறிமுகம் செய்துவைத்தார்.

கோயம்புத்தூர் - நவஇந்தியா அருகே உள்ள அட்சயம் உணவகத்தில் மழை தூரிக் கொண்டிருந்த நேரத்தில் சந்தித்தோம். மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரைப் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு அங்கிருந்து கிளம்பி ஹேப்காலேஜ் to சிங்காநல்லூர் பேருந்து நிலையம் செல்லும் வழியில் வலது பக்கம் உள்ள  கிளஸ்ட்ரஸில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.

அந்தக் சமயம் ஒரு மனிதர் எங்களைக் கடந்து சென்றார். நாங்கள் நிமிர்ந்து பார்த்தோம். மகிழ்ச்சியாக இருந்தது. கற்றது தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் திரு.ராம் அவர்கள். அவரைப் பார்த்ததும் நானும் நண்பர் உதயனும் சென்று பேசினோம். ரொம்ப எளிமையாக பேசினார். இறுதியாக கைகுலுக்கி விட்டு சந்திக்கலாம் என்று சென்று விட்டார். மீண்டும் அதை மரத்தடியில் எங்கள் உரையாடல் தொடர்ந்தது நேரம் போனதே தெரியவில்லை மணி 10.30 மணியாவிட்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறோம். பல வருடங்கள் பார்த்து, பேசிப் பழகிய நண்பர்கள் போல.

எங்கள் உரையாடலில் பெருங்கருக்கான எச்சங்கள் குறித்தும் கல்வெட்டுகள் குறித்தும் ஜி.பி.எஸ்  (GPS) மேப், மேப்பிங், கள ஆய்வின் அணுகுமுறை போன்ற பல பொருண்மையில் எங்கள் உரையாடல் இருந்தது. நீண்ட நெடிய உரையாடலில் இதுவரை, செய்த பணிகள் குறித்தும் இதற்குப் பிறகு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். இந்த நேரம் ஒரு பொன்னான நேரம் என்றே கருதுகிறேன். திரு.உதயன் அவர்களின் பணி வேறு ஒன்றாக இருந்தாலும் அவரின் ஆர்வம் காரணமாக நல்ல தமிழ் ஆளுமைகளோடும் தமிழுக்காக தொண்டாற்றி வரும் ஆளுமைகளோடும் இணைந்து பல அறிய வேலைகளைச் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நல்ல மனிதரை அறிமுகம் செய்த நண்பர் அரிகரசுதனுக்கு நன்றி






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading