ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

சிந்து முதல் பொருநை வரை - சிந்துவெளிப் பண்பாடு ஆதித்தமிழர் பண்பாடு

 

சிந்து முதல் பொருநை வரை



09.02.2024 ன்று கோவை மாவட்டம் பேரூர் - தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் நிகழ்ந்த சிந்து முதல் பொருநை வரை எனும் மாநில அளவிளான தொல்லியல் கருத்தரங்கில் சிந்துவெளிப் பண்பாடு ஆதித்தமிழர் பண்பாடு (இட்டிசேரி, நாக முகுந்தன்குடி, முனைவென்றி கள ஆய்வை முன்வைத்து)

எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினேன்.

நான் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் இட்டிசேரி, நாக முகுந்தன்குடி, முனைவென்றி ஆகிய மூன்று ஊர்களிலும் மேற்பரப்புக் கள ஆய்வு சேகரித்த தொல்பொருள்களைக் காட்சிப்படுத்தியிருந்தேன். சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரி மாணவர்களும் பிஎஸ்ஜி கல்லூரி மாணவர்களும் அரசுக் கல்லூரி மாணவர்களும் கண்டு களித்தார்கள்.  சிந்துவெளிப் பண்பாட்டை முன்னெடுக்கும் திரு. ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களும், கீழடியை உலகறிய செய்த திரு கி.அமர்நாத் ராமகிருஷ்ணனா ஐயா அவர்களும், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்  பேராசிரியர் அ.கருணானந்தன் ஐயா அவர்களும், பேரூர் மடத்தின் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் மேற்கு மண்டல அமைப்பாளர்  பேராசிரியர் முனைவர் த.திலீப்குமார்  அவர்களும், தோழர் ரமணி அவர்களும் பார்த்து மகிழ்ந்து பாராட்டியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வில் எனக்குப் பெரும் துணையாக இருந்த எனது மனைவி முனைவர் பா.கவிதா அவர்களுக்கும் என் அன்பு மகன் இரா.க.தமிழ்ச்செழியனுக்கும் அந்தக் கல்லூரி மாணவர் நிர்மல் குமார் அவர்களுக்கும், போட்டோ எடுத்து உதவிய சஞசீவி மாணவருக்கும் மேலும் எனக்கு உதவி செய்த அனைவருக்கும்  நான் நன்றி கூற கடமைப்பட்டு இருக்கிறேன்.

அப்பொருள்களைப் பார்வையிட்ட போது என் மகனின் ஈடுபாட்டைப் பார்த்து அருகில் அழைத்து இரா.க.தமிழ்ச்செழியனின் இரு தோள்களிலும் கைவைத்து புகைப்படம் எடுக்கச் சொன்ன ஆர்.பாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் நான் சேகரித்த பொருட்களில் ஒருசில பொருட்


கள் முக்கியமானவை என்றும் இப்பொருள் வைகை நதிக்கரை ஓரத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியவை பாதுகாத்துவையுங்கள் எழுதுங்கள் என்று என்னை ஊக்கப்படுத்திய  
கி.அமர்நாத் ராமகிருஷ்ணனா  ஐயா அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் பல…

எங்களைப் புகைப்படம் எடுத்து நினைவலைகளில் தக்க வைத்த புகைப்பட கலைஞர், தொல்லியல் ஆர்வளர் நண்பர் ஜெயக்குமார்  அவர்களுக்கு நன்றி.








 
நன்றி.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading