ஞாயிறு, 21 ஜனவரி, 2024

ஏலாதி - கணிமேதாவியார்

 


ஏலாதி

கணிமேதாவியார்

 

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதி என்பதும் ஒன்று. ஏலாதியில் - ஏலக்காய் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, சிறு நாவற்பூ மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்துப் பொடியாக்கி தேன், பால், சுடுநீர் ஆகிய ஏதோ ஒன்றில் தேவையான அளவு சேர்த்து உட்கொண்டால், அது உடலுக்கு மருந்தாக மாறி வலிமை, பொலிவு, தெம்பு ஆகியவற்றைத் தரும். அதைப்போல இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஆறு அறக்கருத்துகளையும் படித்துக் கடைப்பிடித்தால் மக்களின் அறியாமையை நீக்கி அறிவைத் தரவல்லன. அதனால் இந்நூலுக்கு ஏலாதி என்ற பெயர் வந்தது என்பர். மருந்துப் பெயர் பெற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் மூன்றனுள் இது மூன்றாவதாகும். கடவுள் வாழ்த்துப்பாடலும் சிறப்புப்பாயிரமும் நீங்களாக 80 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

கணிமேதாவியார்

நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். இவரைக் கணி மேதையார் என்றும் அழைப்பர். கணித மேதை என்னும் தொடரினைக் கொண்டு சோதிடத்தில் வல்லவர் என்பர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய திணைமாலை நூற்றைம்பதினை இயற்றியவரும் இவரே என்பர். கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை முதலியவற்றையும் காமம், கள் ஆகியவற்றையும் நீக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூறுவதால் இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் எனலாம். இவரின் காலம் நான்காம் நூற்றாண்டு.

பாடல் - 02

கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த

அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,

மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!

விண்ணவர்க்கும் மேலாய்விடும்.

தேன் சிந்தும் பூக்களை அணிந்த காற்கூந்தளை டையவளே! கொலைத் தொழிலை விரும்பாதவனும், பிற உயிர்களைக் கொல்லாதவனும், புலால் உண்ணாதவனும், மிகுந்து வருந்தும் தொழிலை செய்யாதவனும், பொய் பேசாதவனும், எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து விலகாதவனும் பூமியில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் போற்றப்படுவான்.


பாடல் - 05

தனக்கு என்றும், ஓர் பாங்கன், பொய்யான்; மெய் ஆக்கும்;

எனக்கு என்று இயையான், யாது ஒன்றும்; புனக் கொன்றை

போலும் இழையார் சொல் தேறான்; களியானேல்;

சாலும், பிற நூலின் சார்பு.

   எதற்காகவும், தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் பொய் பேசாது உண்மையைமட்டும் பேசுபவன், எந்தவொரு பொருளையும் னக்குரியதென எடுத்து வைக்காதவனும், முல்லை நிலத்தில் உள்ள கொன்றைப் பூக்களை அணியும் பெண்களின் சொற்களைக் கேட்காதவனும், செல்வச் செருக்கில்லாதவனாய் ஒருவன் வாழ்ந்தால் அவனிடத்தில் அறநூல்களில் கூறப்பட்ட மேன்மையான பொருள்கள் எல்லாம் வந்து நிரம்பும்.

பாடல் - 06

நிறை உடைமை, நீர்மை உடைமை, கொடையே,

பொறை உடைமை, பொய்ம்மை, புலாற்கண் மறை உடைமை,

வேய் அன்ன தோளாய்! - இவை உடையான் பல் உயிர்க்கும்

தாய் அன்னன் என்னத் தகும். 

மூங்கில் போன்ற தோளை டையவளே! மனம் போன போக்கில் போகாது தன் மனத்தை அடக்கி இருத்தலும், நற்குணமுடைதலும், ஈதலும், பொறுமையாக இருத்தலும், பொய் கூறாமல்  இருத்தலும், தன்னைக் கட்டுப்படுத்த ஊன் உண்ணாமல் இருத்தலும் ஆகிய இப்பண்புகளை உடையவனை தாயின் அன்பைப் போல அன்புடையவன் என்று அனைரும் போற்றுவர்.

பாடல் - 07

இன்சொல், அளாவல், இடம், இனிது ஊண், யாவர்க்கும்

வன்சொல் களைந்து, வகுப்பானேல் மென் சொல்,

முருந்து ஏய்க்கும் முள் போல் எயிற்றினாய்! - நாளும்

விருந்து ஏற்பர், விண்ணோர் விரைந்து.

மென்மையான சொற்களையும், மயில் தோகையினது அடியைப் போன்று பல்லையும் உடையவளே! தன் வீட்டிற்கு வரும் விருந்தினரிடம். இன்சொற் கூறலும், கலந்து றவாடலும், இருக்க இடம் ருதலும், அறுசுவை உணவு அளித்து கடுஞ்சொல் பேசாது மென்மையான சொற்களைப் பேசி சிறப்புச் செய்பவளை எக்காலமும் வானோர் விருந்தினராய் ஏற்றுக்கொள்வர்.

பாடல் - 08

உடன்படான், கொல்லான், உடன்றார் நோய் தீர்ந்து,

மடம் படான், மாண்டார் நூல் மாண்ட இடம் பட

நோக்கும் வாய் நோக்கி, நுழைவானேல், - மற்று அவனை

யாக்குமவர் யாக்கும், அணைந்து.

ஒன்றினைப் பிறர் கொல்ல உடன்படாது, தானும் கொல்லாது, நோயால் வருந்துபவரின் நோயைத் தீர்த்து, அறியாமை இருளைப் போக்கி சான்றோருடைய சிறந்த கருத்துகளை ஆராய்ந்து, அதற்குத் தக்கபடி வாழ்பவனை நண்பராக்கிக் கொண்டால் அவ்வியல்புகள் நம்மையும் மேம்படுத்தும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading