செவ்வாய், 12 ஏப்ரல், 2022

சமுதாயம்

 

சமுதாயம்


உன்னுடைய  மாட்டுக்கு 

மூக்கணாங்கயிறு பூரூவதும்

கொட்டுக்கால் அடிப்பதும்

இழுத்துக் கட்டுவதும்

என் வேலை இல்லை


அடங்காத மாட்டை

ஏர்க்காலில் பூட்டுவதும்

வண்டி இழுக்கப் பழக்குவதும்

பழகாத மாட்டுக்குத் 

தார்க்குச்சி எடுப்பதும்

என் வேலை இல்லை


மாட்டைப்  பழக்குவதையே

முழுநேர வேலையாகச் செய்யும்

ஒரு கூட்டம் உண்டு - என்பதற்காக

நானும்  அப்படியே இருக்கவேண்டுமென

நினைப்பது அபத்தம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading