வெள்ளி, 24 மார்ச், 2023

அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர், கருத்தன, எந்தை தன் கண்ணன்

 




அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர்

 

அனைத்தும் வசமாக

 

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்

பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்

முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே.

செவ்வாய், 21 மார்ச், 2023

முல்லைப் பாட்டு - நப்பூதனார்

 




முல்லைப் பாட்டு

-     நப்பூதனார்

 

பத்துப்பாட்டில் நான்கு ஆற்றுப்படைகளுக்குப் பின் வைத்து எண்ணப்படுவது முல்லைப்பாட்டு. இது அகம் சார்ந்த நூல். 103 அடிகளைக் கொண்டது. பத்துப்பாட்டு நூல்களுள் அளவில் மிகச் சிறியது. இதன் ஆசிரியர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இந்நூல் ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது. பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்டது எனினும் தலைவன் பெயர் பாட்டில் கூறப்படவில்லை. இந்நூல் நெஞ்சாற்றுப்படை எனவும் அழைக்கப்படுகின்றது.

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

அணியிலக்கணம்


 

இல்பொருள் உவமையணி

இல்பொருள் உவமையணி மறைபொருளில் வரும். அதாவது இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாகக் காட்டுவது.

எடுத்துக்காட்டு

அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை

வன்பால் கண் வற்றல் மரம் தளிர்த்தற்று

 

அதாவது ஒரு பாலைவனத்திலே பட்டமரம் தளிர்த்ததைப் போன்று அன்பில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது.

 

இங்கே பாலைவனத்தில் பட்டமரம் தளிர்ப்பது என்பதே அன்பில்லா வாழ்க்கைக்கு உவமையாகக் காட்டப்படுகிறது. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்கவே தளிர்க்காது. அப்படியொரு நிகழ்வு நடக்க முடியாத அல்லது இல்லாத ஒரு விடயத்தை உவமையாகக் காட்டுவதே இல்பொருள் உவமையணி

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

சமுதாயம்

 

சமுதாயம்


உன்னுடைய  மாட்டுக்கு 

மூக்கணாங்கயிறு பூரூவதும்

கொட்டுக்கால் அடிப்பதும்

இழுத்துக் கட்டுவதும்

என் வேலை இல்லை


அடங்காத மாட்டை

ஏர்க்காலில் பூட்டுவதும்

வண்டி இழுக்கப் பழக்குவதும்

பழகாத மாட்டுக்குத் 

தார்க்குச்சி எடுப்பதும்

என் வேலை இல்லை