வெள்ளி, 24 மார்ச், 2023

அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர், கருத்தன, எந்தை தன் கண்ணன்

 




அபிராமி அந்தாதி - அபிராமிபட்டர்

 

அனைத்தும் வசமாக

 

கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்

பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்

முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே.

 

கருநீல நிறம் கொண்ட என் தந்தையாகிய சிவபெருமானின் கண்ணிலும் கருத்திலும் என்றும் நீங்காமல் நிற்பவளே! வண்ணமயமான பொன்மலையாம் மேருவை விட பெருத்து நிற்பனவும், பால் வேண்டி அழுத சிறு குழந்தையான திருஞானசம்பந்தருக்குப் பால் கொடுத்து நின்றவளும், உன் கருணையைப் போல் கனமான  கொங்கை அழகு உடையவளும்! சிவந்த திருக்கரங்களில் ஏந்திய வில்லுடனும் உன் அழகிய புன்னகையுடனும் என் முன்னே வந்து காட்சி தர வேண்டும் அன்னையே அபிராம சுந்தரியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading