வான்இன்று
அமையாது ஒழுக்கு.(குறள்.20)
01.
*அகழி* – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
02.
*அருவி* – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
03.
*ஆழிக்கிணறு* - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04.
*ஆறு* - (River) – பெருகி ஓடும் நதி.
05.
*இலஞ்சி* -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர்
தேக்கம்.
06.
*உறை கிணறு* -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
07.
*ஊருணி* -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை.
08.
*ஊற்று* – (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
09.
*ஏரி* -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
10. *ஓடை* (Brook) அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் – எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.