புதன், 27 அக்டோபர், 2021

முனைவென்றியில் உள்ள பழைமையான சிவன் கோயில்

 

முனைவென்றியில் உள்ள பழைமையான சிவன் கோயில் இது. மதுரையை ஆண்ட பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். ஆனால் எந்தப் பாண்டியர் காலம் என்று தெரியவில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாள்முதல் பூசை நடந்ததில்லை. சமிப காலமாக அந்த லிங்கத்திற்கு அருகில் உள்ள வயல்காரர் எப்பவாவது வெள்ளி, செவ்வாய் கிழமையில் பூ போட்டு சூடம் ஏத்தி சாமி கும்பிடுவார் என்கிறார் செ.அன்னதாஜ்.

ஆக கருங்கல்லால் லிங்கத்தின் பீடமும் லிங்கம் எட்டுப் பட்டையாகவும் இருப்பாதல் (லிங்கத்தைக் காணவில்லை) கோயில் கல்லால் ஆன கோயிலாக இருக்கலாம் என அவதானிக்க முடிகிறது. ஆனால் கோயில் போர்க் காரணமாக அழிக்கப் பட்டதா? அல்லது இயற்கையாகவே அழிந்து போனதா? எனத் தெரியவில்லை. கோயில் இருநததர்கான அடையாளமும் அழிக்கப்பட்டுள்ளது. 

லிங்கத்திற்கு அருகே ஒரு செம்பிரான் கல் ஒன்று மட்டும் கிடக்கிறது. இதை வைத்துப் பார்க்கும்போது கோயில் செம்பிரான் கல்லால் எழுப்பப்பட்டதாகவும் இருக்கலாம்.




1 கருத்து:

  1. லிங்கத்தின் பீடத்தை பார்க்கும்பொழுது தாங்கள் கூறியது போலவே பழமையானதாக இருக்கக்கூடும் அதன் வடிவமைப்பும் அருமையாக இருக்கிறது ஆனால் அனாதையாக பார்ப்பார் என்று கிடக்கிறது என்று கேட்கும்போது சற்று வேதனையாக இருக்கிறது இருப்பினும் தாங்கள் அடையாளப்படுத்தி இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது

    பதிலளிநீக்கு

Thank you for Reading