செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

வரலாறு பயில்தல் ஏன்? எப்படி?

வரலாறு பயில்தல் ஏன்? எப்படி?

 

முனைவர் ந.இராஜேந்திரன்

தமிழ் - உதவிப்பேராசிரியர்

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி(த.)

கோயம்புத்தூர் - 641 028

ilayavantamil@gmail.com

 

வரலாறு - ?

மனித இனமம் தோன்றிய காலம் தொடங்கி இன்றுவரை அவரவர் வந்த வழியினை, அடையாளத்தினை, இருப்பினை, பின்புலத்தினை அறிவது வரலாறு. இவ்வரலாறு ஏட்டில் உருப்பெறத் தொடங்கிய காலம் முதல் இன்றுவரை பல்வேறு மாற்றங்களையும் மரபுகளையும் கடந்து வந்துள்ளது. இத்தகு வரலாறு குறித்து அறிஞர் பெருமக்கள் பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளனர்.

இவ்வரலாறு Historia என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானதாகும். சட்டத்துறை பற்றிய பூசலில் சான்றுகளை ஆய்வு செய்வதை ஹோமர் (Homer) வரலாறு என்னும் தொடரால் குறிப்பிட்டார். என்பர் ஆர்.திருஞானசம்பந்தம் (ப.3).

வரலாறு : தமிழ் அகராதிகள், களஞ்சியங்கள் தரும் விளக்கம்

இன்று நிகழ்ந்து நாளைய வரலாறாக உருப்பெறும் ஒரு நிகழ்விற்கு அகராதிகள் பல விளக்கங்கள் தந்துள்ளன. வரலாறு எனும் சொல்லுக்கு யாழ்ப்பாணர் அகராதியும் நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதியும் ஒழுங்கு, மூலம் எனப் பொருள் தந்துள்ளது (2008:409).

நிகழ்ச்சி முறை, சரித்திரம், பூர்வ சரித்திரம், சங்கதி, விபரம், உபாயம், உதாரணம் என வரலாறுக்குப் பல பொருள்களைச் சுட்டுகின்றது தமிழ்ப் பேரகராதி (1982:3511).

ஒழுங்கு, மூலம், சங்கதி, நிகழ்ச்சிமுறை, சரித்திரம், பூர்வசரித்திரம், விவரம், உபாயம், உதாரணம், வமிசாவலி, வரலாற்றுமுறைமை, பரம்பரையாகக் கையாளப்படும் அடிப்படை வழக்கு, கதை, வருதலின் வழி, பண்டைய வரலாறு, இடைக்கால வரலாறு, வாழ்க்கை வரலாறு, தன் வாழ்க்கை வரலாறு, வரலாறு காணாத கூட்டம், கால அடிப்படையில் அறியும் படிப்பு, முன் வரலாறு, செய்தி, வழிவகை, எடுத்துக்காட்டு, சரிதை, விருத்தாந்தம், ஜீவித சரித்திரம், சுயவரலாறு, சுயசரித்திரம், சுயசரிதம், சுய சரிதை, வண்டவாளம், அரசியல் திட்டங்களும் கோட்பாடுகளும், மதக்கொள்கைகளும் வேதாந்த சித்தாந்தங்களும், விவசாயம், கைத்தொழில், வாணிகம் முதலியவைகளும் மனிதர்களுடைய உணவு, உடை, நடத்தை, விளையாட்டு முறைகள் முதலியவை எல்லாம் மேற்குறிப்பிட்ட வரலாறு எனும் சொல்லுக்குப் பொருளாக அமைகின்றன.

 வரலாறு பற்றித் திறனாய்வாளர்களின் விளக்கம்

ஓர் இனமக்களின் வரலாறு என்பது போர்க்களத்தோடும் அதனில் நின்று கொண்டு இருந்த மன்னர்களின் புயபல பராக்கிரமத்தோடும் ஒடுங்கி முடிந்துவிடுவதில்லை. மன்னர்களையும் அவர்களின் ஆட்சி நலத்தையும் பண்பு நலத்தையும் அவர்கள் காலத்து மற்றத் துறையினரின் நடவடிக்கைகளையும் ஒருங்கே சொல்வதுதான் வரலாறு என்கிறார் சாலை இளந்திரையன் (XVI).

மக்களின் வாழ்க்கை கடந்த காலத்தில் எப்படி இருந்தது? என்பதை விளக்க முயலுவதே வரலாறு உலகில் உள்ள கலைகள் அனைத்தையும் ஈன்றெடுத்துப் பாலூட்டிச் சீராட்டித் தாலாட்டிப் போற்றி வளர்த்த பெருமை வரலாற்றிற்கு உரித்தாகும். இக்காரணத்தினால்தான் அறிவியலின் அன்னை என்று வரலாற்றை அறிஞர்கள் பாராட்டுகின்றனர் என்கிறார் க.த.திருநாவுக்கரசு (1962:10).

 பிற நாட்டு அறிஞர்கள் கருத்து

வரலாறு குறித்துத் தமிழ் அறிஞர்கள் போல் பிற நாட்டு அறிஞர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அக்கருத்துகள் பின்வருமாறு: 

வரலாறு என்பது கலையும் அறிவியலும் கலந்ததொரு இனிய கலவை என்பது டிரெவெல்யான் (Trevelyan) போன்ற வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும்.(ப.2).

வரலாறு கற்பனைக் கதையன்று, உண்மை என்று நம்பத்தக்க சான்றுகளின் உதவிகொண்டு நாம் ஏற்றுக்கொள்ளும் ஒருசெய்தித் தொகை என்கிறார் ஈ.எச்.கார் (2004:4).

 ஏன் வரலாறு படிக்க வேண்டும்

வரலாறு என்றால் என்ன? நாம் ஏன் வரலாற்றைப் படிக்க வேண்டும்? கடந்த கால வரலாற்றால் எதிர் காலத்திற்கு என்ன கொடுத்துவிட முடியும்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்படுவோமேயானால், ஒரு சமூகத்தின் இன்றைய வளர்ச்சி என்பது நேற்றைய வரலாற்றின் தொடர்ச்சியே எனலாம்.

 

      வரலாற்றைக் கற்பதன் மூலம் ஒருவர் தனது பாரம்பரியத்தைக் காக்க முடியும். மருத்துவம், அறிவியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் நமது பாரம்பரியத்தை, பழமையின் சிறப்பை அறியலாம்.

 

இனம் - தமிழினம் ( கல் தோன்றி மண் தோன்றா…)

  சிந்துவெளி அகழ்வாராய்ச்சி DNA-

 

வாய்மொழி வரலாறு

வாய்மொழியாக வழங்கும் தரவுகளைப் பயன்படுத்தி வரலாறு எழுதும் முறை மிகவும் பழைமையான ஒன்று. ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்ட்டா குடியரசுகளுக்கிடையே கி.மு.431 தொடங்கி கி.மு.404 முடிய நிகழ்ந்த பெலப்பனீசியப் போர் குறித்துத் தூஸிடைஸ் (1960:22) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் பெலப்பனீசியப் போர் என்ற நூலை எழுதியுள்ளார். அந்நூலை எழுதுவதற்கு வாய்மொழிச் சான்றுகளைப் பயன்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்குறிப்பின்படி ஒரு நாட்டின் வரலாற்றை நிர்ணயிப்பதில் வாய்மொழிச் சான்றுகளும் முக்கிய இடத்தினைப் பெறுகின்றன என்பது தெளிவாகின்றது.

 

நகர நாகரிகம் – கீழடி

தொழில்

கடல் கடந்து வாணிபம்

ஆமை - ஒரிசா பாலு

 

ஆடை, அணிகலன், உணவு - 5 திணை

புறநானூற்றில்

10 வகை ஆடைகளையும்,

28 வகை அணிகலன்களையும்,

30 படைக்கலக்கருவிகளையும்,

67வகை உணவுகளையும் எடுத்து இயம்புகின்றன.

 

கல்வி - குறியீடு

(எழுத்துமொழி உருப்பெறக் காரணகாரியமாக இருந்தவை வாய்மொழிப் பாடல்கள். இவ்வாய்மொழிப் பாடல்களைப் பாடிவந்தவர்கள் பாணர் மரபினைச் சேர்ந்தவர்கள். ‘இப்பாணர் மரபின் சத்தான பகுதிகளைச் செறித்துக் கொண்டுதான் புலவர் மரபு தோற்றம் பெற்றது’ என்பர் பிரபஞ்சன் (உயிர்மெய்-மாதஇதழ்).)

 

பண்பாடு - தாய்லாந்து (மஞ்சள் தண்ணீர்)

 

போர்க் கலை -

வளரி,(சேதுபதி மன்னர்கள்)

நோக்கு வர்ணம், போதிமர்மர் - வலராறு  

 

கட்டிடக் கலை -

கம்போடியா - அங்கூர்வாட்  

(அங்கோர் வாட் (Angkor Wat) என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். இது 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. அங்கோர் என்பது நகரத்தையும், வாட் என்பது கோயிலையும் குறிக்கும்.)(விக்கிப்பீடியா)

 

ஓவியக் கலை -

பாறை ஓவியம், எல்லோரா, தஞ்சை கோயில்

இசைக் கலை -

பாணர்

கர்னாடக இசை 

 

      கடந்த காலத்தைப் பற்றிய அறிவு இல்லாமல் நிகழ்காலத்தைப் புரிந்துகொள்ள முடியாது. கடந்த கால நிகழ்வுகளை ஆழ்ந்து நோக்கினால் அவை நமக்கு வாழ்க்கை உண்மையைப் புரியவைக்கின்றன. இக்கடந்த கால நிகழ்ச்சிகளின் துணைகொண்டு நிகழ்காலத்தைப் புரிந்துகொண்டு நாம் எதிர் காலத்தையும் முன் கணிப்பு செய்யலாம்.

 

ஒரு சமூகத்தின் மொழி, இனம், பண்பாடு, கலை, கலாச்சாரம், தொழில், உணவு, உடை, உறைவிடம், பொழுதுபோக்கு, பொருளாதாரம், என அனைத்துத் தளங்களிலும் வரலாறு மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது.

 

 

தங்களது கடந்த கால வரலாறு

தோற்றம், கலாச்சாரம் ஆகியவற்றை

அறியாத மக்கள் வேரற்ற

மரம் போன்றவர்கள்

                             -மார்க்ஸ் கார்வே

 

உணர்வோடு படிக்க வேண்டும்

புரிந்து கொண்டு படிக்க வேண்டும்

      அப்படி படிக்கும் போதுதான் நீங்கள் அடுத்த சந்ததிக்கு வரலாற்றைக் கடத்த முடியும்.








 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading