காப்பியத்தின்
தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை
உலக
மொழிகள் பலவற்றிலும் தொன்று தொட்டுக் காப்பியம் என்னும் இலக்கிய வகை படைக்கப்பட்டு
வந்திருக்கிறது. இலக்கிய உலகில் காப்பியம் ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது. இதனைச்
செவ்விலக்கிய வகையில் அடக்குவர். இலக்கிய வளம் நிறைந்த பழமையான மொழிகளில் முதல்
இலக்கியம் காப்பியமாக அமைவதைக் காணலாம். உலகக் காப்பியங்கள் தோன்றிப் படிப்படியாக
வளர்ந்து வந்துள்ளமையைக் காணலாம். காப்பியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
காப்பியம் விளக்கம்
காப்பியம்
என்பது ஓர் இலக்கிய வகை ஆகும். வாய்மொழி இலக்கியம், தன்னுணர்ச்சிப்
பாடல்கள், கதைபொதி பாடல்கள் என்று விரிந்து கொண்டே வந்த
இலக்கிய வளர்ச்சி காப்பியத்தில் முழுமை எய்தியது எனலாம்.
காப்பியம்
என்பது இலக்கிய வடிவங்களில் ஒன்று. இதனைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் பகுத்துக் காட்டினர் அறம், பொருள்,
இன்பம், வீடு என்பனவற்றோடு ஓர் ஒப்பிலாத்
தலைவனையும் தலைவியையும் கொண்டு இயற்றப்படுவது பெருங்காப்பியமாகும். வாய்மொழி
இலக்கியம், தன்னுணர்ச்சிப் பாடல்கள், கதைபொதி
பாடல்கள் என்று இது விரிந்து வளர்கிறது. நான்கு பொருள்களையும் பயக்காமல் சில
பொருள்கள் மட்டும் பயக்கும் கதைநூல் சிறுகாப்பியம்.
தமிழின்
பழைய இலக்கியங்கள் தனிப்பாடல் திரட்டுக்களாகவே உள்ளன. தமிழ் மொழியில் 3 அடி முதல் 782 அடியுள்ள நீண்ட பாட்டு வரையில் உள்ள
தனிப்பாட்டுகளே சங்க இலக்கியமாக உள்ளன. தொடக்கத்தில் நாட்டுப் பாடல்களின்
ஓசையமைப்பையும் பொருள் வகையையும் ஒட்டி வளர்க்கப்பட்ட தனிப்பாடல்களே தமிழ்
இலக்கியத்தின் தோற்றமாகும்.
காப்பியம் ஆங்கிலத்தில் EPIC எனப்படுகின்றது. இச்சொல் EPOS என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையில் உருவானது என்பர். காப்பியம் என்ற சொல்லில் காப்பு+இயம் என்ற சொற்களின் சேர்க்கையாகக் கருதப்படுகின்றன.