சூளாமணி
:
மந்திர
சாலைச் சருக்கம்
தோலாமொழித்
தேவர்
சூளாமணி காப்பியத்தின் கதை மாந்தர்கள்
காப்பியம் பெயர் - சூளாமணி
சமயம் - சமணக் காப்பியம்
காலம் - கி.பி.10 ஆம் நூற்றாண்டு
சருக்கம் - 12 சருக்கங்கள்
பாடல்கள் - 2131 பாடல்கள்
பா - விருத்தப்பா
நூலின் தன்மை - வடமொழித் தழுவல்
தழுவிய வடமொழி நூல் - ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம்
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்
நாடு - பரத கண்டம் - சுரமை நாடு
பரத கண்டம்
நாடு - சுரமை
தலைநகரம் - போதனமா நகர்
மன்னன் - பயாபதி
மிகாபதி (மூத்த மனைவி) - சசி (இளைய
மனைவி)
விஜயன் (மிகாபதியின் மகன்) - திவிட்டன்
(சசியின் மகன்)
விஜயன் - வெண்மை நிறம் உடையவன் - திவிட்டன் - கருமை நிறம் உடையவன்
பலராமனைப் போல் வீரமுடையவன் - கண்ணனைப் போல் வீரமுடையவன்
நிமித்திகன்
வித்தியாதர நாடு
சுவலனசடி (மன்னன்)
மகன் - அருகக்கீர்த்தி - மகள் - சுயம்பிரபை
அச்சுவகண்டன் (வடசேரி தேசத்தின் மன்னன்)
மருசி (தூதுவன்)
சதவிந்து (நிமித்ததன்)
அரிமஞ்சு (அமைச்சன்)
அரிகேது (மந்திரவாதி)
சூளாமணி
ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் இயற்றப்பட்டது ஒரு சமண சமயம் சார்ந்த நூல். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவரால் இந்நூல் இயற்றப்பட்டது. தோலாமொழித் தேவர். ‘செங்கண் நெடியான் சரிதம்’ என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி.10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். இந்நூல். நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் என 12 சருக்கங்களையும் 2131 பாடல்களையும் கொண்டது. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.
சூளாமணி
என்பது மகுடத்தின் ‘முடிமணி’ என்றும், ‘நாயக மணி’ என்றும்
நச்சினார்க்கினியர் உரை கூறுகிறார். இதன் ஆசிரியர் இரத்தின பல்லவ நகரம் “சூளாமணியின்
ஒளிர்வது”; “அருஞ்சயன்
அவனை..... மலைக்கோர் சூளாமணி எனக் கருது”; சூளாமணிக் காப்பியத்
தலைவன் திவிட்டன் குன்றேந்தி நின்ற கோலம் ‘முடிமேல் சூளாமணி முளைத்த சோதி’
போன்றது; முத்தி நிலை அடைந்த திவிட்டன் தந்தை பயாபதி மன்னன்’
“உயர்ந்து உலகின்
முடிக்கோர் சூளாமணியானான்”; என நான்கு இடங்களில் சூளாமணி
என்ற சொல் இடம் பெறுகின்றது. இதனால் இந்நூலுக்குச் சூளாமணி எனப் பெயர் வழங்கிற்று
என்பர். மேலும் வடமொழி மூலமான மகாபுராணம் சைனருக்குச் சூளாமணி போன்றது. எனவே
அந்நூலின் ஒரு பகுதியான இந்நூலுக்கும் சூளாமணி என்ற பெயர் வழங்கலாயிற்று என்றும்
கூறுவர். இந்நூலாசிரியர் அவனி சூளாமணி என்ற பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவர்;
எனவே அவன் பெயரால் இந்நூல் வழங்கலாயிற்று என்ற கருத்தும் உண்டு.
ஆசிரியர் வரலாறு
நூலாசிரியர் தோலாமொழித் தேவர். இது இவரது
இயற்பெயர் என்று தோன்றவில்லை. இவரது இயற்பெயர் ‘வர்த்த தேவர்’ எனக் கருதுகிறார்
து.அ. கோபிநாதராவ். கன்னட நாட்டிலுள்ள சிரவண பெல்கொளாவில் உள்ள வடமொழிக் கல்வெட்டு, ‘சூடாமணி
என்பது காவியங்களுக்கெல்லாம் சூடாமணி போன்றது; இதைக்
கீர்த்திபெறத் தக்க புண்ணியம் செய்த வர்த்த தேவர்’ இயற்றினார் எனக்
குறிப்பிடுகிறது. இங்குச் வர்த்த தேவர் என்பார் ‘வர்த்தமான தேவரே’ என்பர். இவர்
சொல்லில் தோற்காதவர்; வெல்லும் சொல் வல்லார் என்பதால்
தோலாமொழித் தேவர் என அழைக்கப் பெற்றார் என்று கருதுகின்றனர். இவர் தரும
தீர்த்தங்கரரிடத்து ஈடுபாடு கொண்டவர். கார்வெட்டி அரையன் என்ற தலைவன் ஆதரவுடன்
வடமொழி மகாபுராணத்தில் உள்ள ‘சிரேயாம்ச சுவாமி சரிதத்தின்’ ஒருபகுதியான பிரசாபதி
அரசன் வரலாற்றைப் பாடுவதே சூளாமணிக் காப்பியமாகும்.
கதைச் சுருக்கம்
இக்கதைச் சுரமை நாட்டின் இளவரசனான திவிட்டன்
என்பவன், வித்தியாதர நாட்டு இளவரசி சுயம்பிரபையை
மணந்து கொண்டதனால் ஏற்பட்ட சிக்கல்களையும் அதனால் திவிட்டன் நிகழ்த்திய வீரச்
செயல்களையும் கூறுகிறது. இந்தப் பின்னணியில் இதன் ஆசிரியர் சமண சமயத் தத்துவங்களை
விளக்குகிறார். வாழ்க்கையின் ரசனையும், வாழும் விதமும்
சூளாமணியில் தெளிவாகக் குறிப்பிடப்படுகிறது.
சமணத் தத்துவங்கள் மற்றும் நான்கு வகையான பிறவிகள் பற்றி விரிவாக விளக்குகிறது இந்நூல். இந் நான்கு பிறவிகளுள் மனிதப் பிறவியில் மட்டுமே வீடுபேறு அடைவதற்கான முயற்சிகளைச் செய்யும் வாய்ப்பு உண்டென்றும் அதனால் மனிதப் பிறவி எடுத்த அனைவரும் அதற்கான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் கருதும் சமணக் கோட்பாடுகளின் வழி நின்று அதற்கான வழிமுறைகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.
மந்திர சாலைச்
சருக்கம் கதைச் சுருக்கம்
விழுமியம் : அரசமாட்சி
இச்சருக்கத்தின் கண் சுவலனசடி அயரசன் அமைச்சர்களை மந்திர சாலைக்கு அழைத்தலும், அவர்கள்பால் அமைச்சியலின் நன்மையைச் சிறப்பித்துக் கூறுதலும், சுயம்பிரபைக்கு ஏற்ற கணவனைத் தெரிந்து கூறுமாறு அவர்களைப் கேட்பதும், சுச்சுதன் என்னும் அமைச்சன் அச்சுவகண்டன் என்பவனது சிறப்பை எடுத்துக் கூறி அவனே தகுந்தவன் என்பதும், அவனை மறுத்துப் பவச்சுதன் என்பவன், கின்னரகீத நாட்டு இளவரசனான பவனஞ்சன் முதல் இந்திர சஞ்சயத்து அருஞ்சயன் ஈறாக இளவரசர் பலரையும் கூறி அவர்களுள் ஒருவனைத் தெரிந்துகொள்ளுதல் தகுதியென்பதும், அவனை மறுத்துச் சுதசாகரன் என்பவன் சுரேந்திர காந்தத்து விச்சுவன் என்பான் சிறந்தவன் என்பதும்; இவர்கள் அனைவரையும் விலக்கிச் சுமந்திரி என்பவன் சுயம்வரம் கூடாதென மறுத்துச் சதவிந்து என்னும் நிமித்திகனை கேட்க வேண்டும் என்பதும், அதைக் கேட்டு அரசன் சதவிந்து நிமித்திகனிடம் செல்வதும், அச்சதவிந்து நிமித்திகன் மாபுராணத்தினைச் சான்று காட்டிச் சுயம்பிரபைக்குத் திவிட்டனே ஏற்ற கணவன் என்றும், அவன் அரிமாவை வாய்கிழிப்பான் என்றும் கூறுதலும், அரசன் திரும்பி வந்து அமைச்சர்களுக்கு உரைத்து, மருசி என்பவனைப் பயாபதியிடம் தூது அனுப்புவதும் அவன் சுரமை நாட்டுக்கு வருவதும் பிறவும் இச்சருக்கத்தில் கூறப்பெறுகின்றன.
அமைச்சர்கள் அரசனிடத்திற்கு வருதல்
செஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது
தஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா
ரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை
நஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார் - (233)
அரசன் சினம் கொள்ளும் இயல்பினன் அவன் அழைத்துள்ளான் என்றதும் நடுக்கத்துடன் அமைச்சர்கள் விரைந்து வந்தனர்
மந்திரசாலையின்
அமைப்பு
உள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப்
புள்ளுமல் லாதவும் புகாத நீரது
வெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை
வள்ளறன் மந்திர சாலை வண்ணமே - (234)
அரசன் மந்திர சாலையில் இருந்தான். அதன் உள்ளே எது பேசினாலும் வெளியில் கேட்காது. ஈக்கூட அழைப்பின்றி அதற்குள் நுழைய முடியாது.
அரசன் பேசத்
தொடங்குதல்
ஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்
பூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்
வீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட
வீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே - (235)
அமைச்சர்கள் அனைவரும் வந்த பின்னர், அரசன் தன் மணிக்குழை ஒளி வீசப் பேசத் தொடங்கினான்
வேறு - மன்னன்
அமைச்சர் மாண்பு கூறுதல்
மண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப்
புண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட
நுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த
றேற்றா
ரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை
யன்றே - (236)
மன்னர் பலரும் வணங்கும் பேரு பெற்றிருந்தாலும் அமைச்சருடன் கூடிச் செயல்படாத மன்னர் இல்லை
அமைச்சர் மாண்பு
வால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்
கோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய
னேனும்
மேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி
நின்றார்
நூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர் - (237)
உலகத்தை ஆளும் அரசன் என்றாலும் நூலைக் கற்ற புலவராகிய அமைச்சருடன் சூழாத அரசன் இல்லை
அரசனுக்கு அனைத்தும்
ஆகுபவர் அமைச்சர்களே
சுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச்
சூட்டி
வெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற்
றிருக்கு மேனு
மற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ்
சால்பு
மற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே - (238)
அரசனின் முடி, குடை, வாழ்க்கை, வலிமை எல்லாவற்றையும் உருவாக்குபவர் அமைச்சர்களே
அமைச்சர்கள் துணை
கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்
வீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ
னாலே
தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு
தாரீர்
பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்
பூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே - (239)
உலகைக் காக்கும் விழுமிய அறத்தை அரசன் பூண்டிருப்பது கற்றவர் துணையாக இருப்பதால்தான்
அரசன் முகமன்
பொழிதல்
அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து
நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு
மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே - (240)
அழிவு இன்றி உலகம் காக்கும் தொழிலுக்கு கற்றவர் கூறும் உறுதி வேண்டும்
அரசனும்
அமைச்சர்களும்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து
சொன்னால்
அறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்
செறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து
கூறி
அறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார் - (241)
அமைச்சர்கள் தெளிவும் செறிவும் நிறைந்த நூலறிவு மிக்கவர். அவர்கள் கூறுகிறபடி ஆள்பவன் அரசன்.
தோள்வலியும்
சூழ்ச்சியும்
வாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும்
வாயில்
தோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத்
தொகையிற் றாகும்
ஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்
கோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான் - (242)
வாள் வலியும் தோள்
வலியும் உடையவன் அரசன் ஆள் வலி படையும் அவனுக்கு உண்டு
இவை அவனுக்கு அழகு என்றாலும் சூழ் வலிமையே அவனுக்குத் துணை
சூழ்ச்சியுட்
சிறந்தோர் மாட்சிபெறுவர்
ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்
சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ
ன்று மன்றே
யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ்
சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே - (243)
அரசன் ஊழினால் வந்தவன் அவன் செயல்கள் அமைச்சின் சூழ்திறத்தில் நடக்கும்
சூழ்சியே அரசன்
ஆற்றல்
ஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின்
மிக்க
ஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்
ஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து
செல்லும்
ஆற்றலா
னரச னாகி னரியதொன் றில்லை யன்றே - (244)
அரசனின் திறமெல்லாம் அமைச்சரின் சூழ்திறனே
இன்ப வாழ்க்கையிற்
படிந்த அரசர் துன்படைவர்
வடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த
மன்னர்க்
கடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர்
வாழ்க்கை
கடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா
மடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே - (245)
காமத்தில் மதர்த்த மன்னர்க்கு மாட்சிமை இல்லை
சூழ்ச்சி தவறினால்
வீழ்ச்சிக்கு இடமுண்டாம்
சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர்
வாழ்க்கை
தந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந்
தமையல் வேண்டும்
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு
காய்ந்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே (246)
அரசன் திறமறிந்து சூழ்ந்துரைக்கும் அமைச்சர் வேண்டும் அமைச்சர் சொல் கேளாதவன் தன்னையே அழித்துக் கொள்வான்
அமைச்சர் அறவுரை
வழியாவர் அரசர்
எடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு
மடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல
வடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின்
மாட்சி
கொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே - (247)
அரச குடும்பத்தில் பிறந்தவர் அழகர் என்றாலும் நுண்ணூல் மதியவர் பளிங்கு போல் கூறும் செயல்களை மன்னன் செய்வான்
உங்களால்தான் நான்
சிறந்து விளங்குகிறேன் என்றல்
மன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய
பன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந்
துரைப்ப தென்னை
யென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே
யின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான் - (248)
நீங்கள் என்னை மன்னன் ஆக்கி
இராப்பகலாகச் செயலாற்றி வருவதால்தான் நான் இன்பமாக வாழ்கிறேன் என்று அரசன்
சுவலனசடி கூறினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for Reading