வியாழன், 8 ஆகஸ்ட், 2024

சூளாமணி : மந்திர சாலைச் சருக்கம் தோலாமொழித் தேவர்

 


சூளாமணி :

மந்திர சாலைச் சருக்கம்

தோலாமொழித் தேவர்


 

சூளாமணி காப்பியத்தின் கதை மாந்தர்கள்

காப்பியம் பெயர் - சூளாமணி

சமயம் - சமணக் காப்பியம்

காலம் - கி.பி.10 ஆம் நூற்றாண்டு

சருக்கம் - 12 சருக்கங்கள்

பாடல்கள் - 2131 பாடல்கள்

பா - விருத்தப்பா

நூலின் தன்மை - வடமொழித் தழுவல்

தழுவிய வடமொழி நூல் - ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம்

ஆசிரியர் - தோலாமொழித் தேவர்


நாடு - பரத கண்டம் - சுரமை நாடு

பரத கண்டம்

நாடு - சுரமை

தலைநகரம் - போதனமா நகர்

மன்னன் - யாபதி

மிகாபதி (மூத்த மனைவி) -  சசி (இளைய மனைவி)

விஜயன் (மிகாபதியின் மகன்)   - திவிட்டன் (சசியின் மகன்)

விஜயன் - வெண்மை நிறம் உடையவன் - திவிட்டன் - கருமை நிறம் உடையவன்

பலராமனைப் போல் வீரமுடையவன் - கண்ணனைப் போல் வீரமுடையவன்

நிமித்திகன்

 

வித்தியாதர நாடு

சுவலனசடி (மன்னன்)

மகன் - அருகக்கீர்த்தி  - மகள் - சுயம்பிரபை

அச்சுவகண்டன் (வடசேரி தேசத்தின் மன்னன்)

மருசி (தூதுவன்)

சதவிந்து (நிமித்ததன்)

அரிமஞ்சு (அமைச்சன்)

அரிகேது (மந்திரவாதி)

 சூளாமணி

ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்றான சூளாமணி ஜினசேனர் என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் இயற்றப்பட்டது ஒரு சமண சமயம் சார்ந்த நூல். சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவரால் இந்நூல் இயற்றப்பட்டது. தோலாமொழித் தேவர். ‘செங்கண் நெடியான் சரிதம்’ என்றுதான் தம் நூலைக் குறிப்பிடுகிறார். கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட யாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி.10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம். இந்நூல். நாட்டுச் சருக்கம், நகரச் சருக்கம், குமார காலச் சருக்கம், இரத நூபுரச் சருக்கம், மந்திர சாலைச் சருக்கம், தூதுவிடு சருக்கம், சீயவதைச் சருக்கம், கல்யாணச் சருக்கம், அரசியற் சருக்கம், சுயம்வரச் சருக்கம், துறவுச் சருக்கம், முத்திச் சருக்கம் என 12 சருக்கங்களையும் 2131 பாடல்களையும் கொண்டது. விருத்தப்பாவால் ஆனது. கதை கூறும் போக்கில் சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.