சனி, 2 நவம்பர், 2019

சங்கப் புலவர்களின் அறிவியல் அணுகுமுறை எடுத்துரைப்பியல் நோக்கு


சங்கப் புலவர்களின் அறிவியல் அணுகுமுறை
எடுத்துரைப்பியல் நோக்கு
முனைவா் ந.இராஜேந்திரன்
தமிழ் – உதவிப்பேராசிரியா்
இந்தூஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோயமுத்தூர்  - 641 028.


       ரு பொருளைப் பற்றிய செய்திகளைப் பிறர்கூறக் கேட்டோ அல்லது கண்ணால் பார்த்தோ அதன் பருப்பொருளை மற்றும் அறிந்துகொள்ளும் பொது அறிவு வேறு. கண்டு கேட்ட செய்திகளைத் தன் நுண்மாண் நுழைபுலம் கொண்டு அவற்றுள் பொதிந்து கிடக்கும் உட்பொருளை அறிந்துகொள்ளும் பகுத்தறிவு வேறு. இதைத்தான் எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்கிறார் வள்ளுவர்.

       இதைத் தான் உற்று நோக்கி ஆராய்தல் (observation) என்பர் அறிவியலார். இவ்வாறு உற்று நோக்கி ஆராய வேண்டிய அறிவியல் (Science) உண்மைகள் பல சங்க இலக்கியங்களுள் பொதிந்து கிடக்கின்றன. ஆனால், சங்க இலக்கியங்களைப் பயிற்றுவிg;போரும் பயில்வோரும் அவற்றை அறிவியற்கண் கொண்டு பார்க்கின்றானரா எனில், பெரும்பாலோர் அகம், புறம் இலக்கிய நயம் என்ற அறிவிலே நின்று விடுகின்றனரே அன்றி, அறிவியல் உண்மைகளை சிந்திப்போரும் சிந்திக்கத் தூண்டுபவரும் மிகச் சிலராகவே இருக்கக் காண்கிறோம். அந்த வகையில், சங்கப் புலவர்களுக்கு இயற்கையிடத்து ஈடுபாடும், தம்மைச் சுற்றியிருந்த உயிரினங்களை நுணுகிப் பார்க்கும் ஆற்றலும் மிக்கிருந்தமை நமக்கு நன்கு புலப்படுத்துகின்றது. தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது போல பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற வேறு எம்மொழி இலக்கியத்திலும் இத்துணை அரிய அறிவியற் செய்திகள் காணப்படவில்லை என்று பன்மொழியறிஞர்கள் ஒத்துக்கொள்கின்றனர். இத்தகைய சிறந்த நுண்மாண் நுழை புலத்தினராய் விளங்கிய பழந்தமிழ்ப் புலவர் தம் பன்முக ஆற்றலையும் சங்கப் பனுவல்கள் பொதிந்து கிடக்கும் அறிவியல் செய்திகளையும் இனம் கண்டு  இளம் அறிவியல் பயிலும் மாணாக்கர்களுக்கும் ஆய்வு மாணாக்கர்களுக்கும் எடுத்துரைத்தல் வேண்டும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for Reading