ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025

பயன்பாட்டு இலக்கணம் - மரபுப் பிழைகளை நீக்குதல்

 


மரபுப் பிழைகளை நீக்குதல்

 

நமது முன்னோர்கள் (உயர்ந்தோர்) எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி எவ்வாறு குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி இன்றும் வழங்குதல் மரபு என அழைக்கப்படுகிறது. இதனை,

எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்

செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே (நன். நூற். எண் : 387)

என்கிறது நன்னூல்.

 

பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு என்கிறது தமிழ் அகராதி.

இத்தகைய மரபுச் சொற்களை இன்று மக்கள் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் பிழையாகப் பயன்படுத்துகின்றனர். இப்பிழையைக் கண்டறிந்து ரபுப் பிழைகளை நீக்கி, சரியாகப் பேசவும் எழுதவும் இப்பகுதி துணைநிற்கும்.

இளமைப் பெயர்கள்

1.பார்ப்பு, 2.பறழ், 3.குட்டி, 4.குருளை, 5.கன்று, 6.பிள்ளை 7.மகவு, 8.மறி, 9.குழவி எனத் தமிழில் ஒன்பது வகையான இளமைப் பெயர்கள் உள்ளன என்பார் தொல்காப்பியர். இதனை,

 

மாற்ற அருஞ் சிறப்பின் மரபு இயல் கிளப்பின்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியும் என்று

ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே” (தொல்காப்பியம், மரபியல், பாடல்-1)

 

    என்ற நூற்பா வழி அறியமுடிகிறது.

    விலங்குகளின் இளமைப் பெயர்கள்

அணிற் பிள்ளை.

ஆட்டுக் குட்டி

எலிக் குஞ்சு, எலிக் குட்டி

எருமைக் கன்று.

ஒட்டகக் கன்று

ஓநாய்க் குட்டி

கழுதைக் குட்டி.

கரடிக் குட்டி

கீரிப் பிள்ளை.

குதிரைக் குட்டி

குரங்குக் குட்டி, குரங்குப் பறழ்

சிங்கக் குருளை

சிறுத்தைக் குட்டி

நரிக் குருளை, நரிப் பறழ்

நாய்க் குட்டி. நாய்ப் பறழ்

தவளைக் குஞ்சு

பன்றிக் குட்டி

பசுங் கன்று.

புலிக் குட்டி, புலிப் பறழ்

பூனைக் குட்டி.

மான் கன்று

முயல் குருளை

யானைக் கன்று.

வெருகுப் பறழ்

    பறவைகளின் இளமைப் பெயர்கள்

அன்னம் பார்ப்பு

கழுகுப் பார்ப்பு

காக்கைக் குஞ்சு

கிளிப் பிள்ளை

குயில் குஞ்சு

குருவிக் குஞ்சு

கோழிக் குஞ்சு

வாத்துக் குஞ்சு

பருந்துப் பார்ப்பு

புறாக் குஞ்சு

மயில் குஞ்சு

மைனாக் குஞ்சு     

    விலங்குகள் ஒலிக் குறிப்புச் சொற்கள்

அணில் கீச்சிடும்,

எலிக் கீச்சிடும்

எருது எக்காளமிடும்

கழுதைக் கத்தும்,

குதிரைக் கனைக்கும்,

குரங்கு அலம்பும்

சிங்கம் கர்சிக்கும்

தவளைக் கத்தும்

நரி ஊளையிடும்,

நாய்க் குரைக்கும்

பசு கதறும்

பல்லி சொல்லும்

புலி உறுமும்,

பன்றி உறுமும்

யானைப் பிளிறும்

 `    பறவைகள் ஒலிக் குறிப்புச் சொற்கள்

ஆந்தை அலறும்

காகம் கரையும்

கிளிப் பேசும்

குயில் கூவும்

குருவிக் கீச்சிடும்

கோழிக் கொக்கரிக்கும்

சேவல் கூவும் 

புறாக் குனுகும்

மயில் அகவும்

வண்டு முரலும்  

வாத்துக் கத்தும்

வானம்பாடி பாடும்

     விலங்குகள், பறவைகள் தங்குமிடம்

குதிரைக் கொட்டில்,

புலிக் குகை

மாட்டுத் தொழுவம்,

எலிப் பொந்து

வாத்துப் பண்ணை,

எறும்புப் புற்று

கரையான் புற்று

ஈசல் புற்று

காக்கைக் கூடு

கிளிப் பொந்து

குருவிக் கூடு

குளவிக் கூடு

கோழிக் கூடு

பாம்புப் புற்று

    செடி, கொடி மரங்களின் தொகுப்பு

எலுமிச்சைத் தோட்டம்

கருவேலமரக் காடு

கீரைத் தோட்டம்

பயிற் கொல்லை

மிளகாய்த் தோட்டம்

பருத்திக் கொல்லை

பூந் தோட்டம்                    

மாந் தோப்பு                 

வாழைத் தோட்டம்

தேயிலைத் தோட்டம்  

சோளக் கொல்லை  

சவுக்குத் தோப்பு

தென்னந் தோப்பு             

பனங்காடு                   

    தொகுப்புப் பெயர்கள்

ஆட்டு மந்தை

எறும்பு சாரை

கற் குவியல்

சாவிக் கொத்து

திராட்சைக் குலை

பசு நிரை

மாட்டு மந்தை

யானைக் கூட்டம்

விறகுக் கட்டு

வீரர் படை

வைக்கோல் போர்

     தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்

கருவேப்பிள்ளை

மல்லித்தழை

சோளத்தட்டு     

முருங்கைக்கீரை

தாழைமடல்       

தென்னங்கீற்று

வாழையிலை    

பனையோலை

புகையிலை

வேப்பந்தழை     

மாவிலை

மூங்கில் இலை

நெற்பயிர்