இன்று (26.07.2024) கோவையில்
கல்லூரிப் பேராசிரியர்களுக்கான விக்கிமூலக் கூடுகை நடைபெற்றது.
இக்கூடுகையில் விக்கிமூலத்தில் அதிகப் பங்களிப்பு செய்த லோகநாதன் (எ)
தகவலுழவன் மற்றும் பேராசிரியர்களான
முனைவர் ந.இராஜேந்திரன்,
முனைவர் த.சத்தியராஜ்,
முனைவர் பா.கவிதா,
முனைவர் இரா.குணசீலன்,
முனைவர் இரா.நித்யா,
முனைவர் க.பாலாஜி,
பேராசிரியர் இரா.அரிகரசுதன்,
முனைவர் ம. மைதிலி,
முனைவர் வ.காருண்யா,
பேராசிரியர் லலிதா
திரு. ஸ்ரீதர்,
ஆகியோரும் இணைந்து தேவநேயப் பாவாணரின் 52 தொகுதிகளையும் மெய்ப்புப் பார்த்து, மேம்படுத்தி விரைவில் விக்கிமூல மின்நூலகத்தில் தரவு
மேம்பாடு செய்வது குறித்தும் அதற்கானத் திட்டங்கள் குறித்தும் உரையாடினோம்.
தனியார் கல்லூரிகளில் பணி செய்யும் தாங்கள் ஒன்றிணைந்து தமிழுக்காக வேலை
செய்வதைப் பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்
தகவலுழவன்.
பேராசிரியர்கள் விக்கி மூலத் திட்டம் குறித்து இதுவரை என்னென்ன பணிகள்
செய்யப்பட்டிருக்கின்றன இனி செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பது குறித்து
கலந்துரையாடினோம்.
இந்தப் பணிக்கு அரசு உதவிக்கரம் நீட்டினால் இன்றைய காலகட்டத்தில் பெரிதாக
நம்பப்படும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் கான தரவுகளை வெகுவிரைவாக விக்கி மூலத்
திட்டத்தில் கொடுத்து விடலாம் என்பது பேராசிரியர்களின் கருத்தாக அமைந்தது.